உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அவர் எண்ணிய, கூறிய கல்வி தொடர்பான கருத்துக்களில் சில மாறாமல் அப்படியே இருந்து வருவதைப் பார்க்க முடிகின்றன.

கே. சி. யின் தமிழ்த் தொண்டு

மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் பொழுதும் டி. கே. சி. தமிழ் மேல் உள்ள நம்பிக்கையை வெளியிடத் தயங்கவில்லை.

கே.சி.

16-02-1954இல் காலை 6 மணியளவில் இரசிகமணி டி. கே. சி. இறைவன் திருவடி நிழல் அடைந்தார். அதற்கு முதல் நாள் பிற்பகல் இரண்டு மணியளவில் டாக்டர் சேஷகிரி ராவ் டி. கே. சி.யை நாடி பிடித்துப் பார்த்தார். அப்போது.

"தாகம் அதிகமாக எடுக்கிறது. நாவறட்சி கடுமையாக உள்ளது. அது சரி 'நாவறட்சி' என்ற தமிழ் வார்த்தை ஆங்கிலத்தில் உண்டா என்று கேட்டவுடன் டாக்டர் இங்கிலீஷ் வார்த்தை தேடிப்பார்ப்பதில் திணறிவிட்டார்"

என்று கூறியுள்ளதிலிருந்து அவர் தமிழ்மீது கொண்டிருந்த காதல் புலனாகிறது. மேலும்.

என்றார்.

'விவசாயியிடம் பேசுகிற பேச்சிலும், தச்சர்களிடமும், கொல்லர்களிடமும் உறவாடுவதில் கலைச் சொற்கள் கிடைக்கும். இதைச் செய்யாமல் 5ஆவது மாடியில் உட்கார்ந்து கொண்டு கலைச் சொல் தேடினால் எப்படிக் கிடைக்கும்"

டாக்டர் போனபிறகு இரவு ஒரு மணிக்கு கண்ணைத்திறந்து என் பக்கத்தில் நிற்பது யார் என்று கேட்டார். 'குருக் களையா' என்றும் மீண்டும் 'மேலகரத்து சன்னதி மடத்துக் குருக்களையா' என்று சொல்கையில் 'ஓ. தேசிகர்வாளா' என்றார் டி. கே. சி. இல்லை. குருக்களையா என்றார்கள்.

என்றார்.

அதற்கு டி கே. சி.

""இரண்டும் ஒன்று தான்' எல்லாம் ஒரு பொருட் பன்மொழிதான். 'பூஜை செய்யும் போது குருக்கள், மந்திரம் சொல்லும் போது தேசிகர். தேவாரம் பாடும்போது ஓதுவார். ஆள் ஒருவர் தான். பெயர் தான் வேறு"

மீண்டும் விழித்து.

'இலக்கண நியதி பாசைக்கு உள்ளேயே இருக்கிறது. இலக்கணப் புத்தகத்தில் இல்லை. 'கல்லெறிந்தான்' என்னும்போது ஒற்றுமிகும். 'காலொடிந்தான்' என்னும் போது ஒற்று மறையும். 'அவன் வந்தானா' என்னும் போது ஒரு உணர்ச்சி. 'அவன் வந்தானோ' காகிதச்சுவடி ஆய்வுகள்

கே.சி.

175