உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




என்றார்.

எனும் போது வேறொரு உணர்ச்சி. இந்த மாற்றங்களை பாசையே செய்கிறது. இலக்கணம் செய்வதில்லை"

உணர்ச்சியிலிருந்து தினுசு தினுசாக முளைக்கிற ஒவ்வொரு காயலையும், ஒவ்வொரு நிறத்தையும் தமிழ் அப்படியே கையில் எடுத்துப் பிடித்துக் காட்டும். இதர பாசை எதனாலும் அப்படி நிச்சயமாய்க் காட்ட முடியாது"

என்று கடைசியாகச் சொல்லி முடித்தார்.

பரம்பொருளோடு பரம்பொருளாய்க் கலந்து மருவுகிற வேளையிலும் தமிழின் எளிமையையும், அருமையையும் அன்பர்களுக்கு விளக்கிக் காட்டினார்.

இவ்வாறு இரசிகமணி டி. கே. சி. எழுதிய கடிதங்கள் வரலாற்றுக் கருவூலமாக - கலைக்கருவூலமாகத் திகழ்கின்றன. அவர் கடிதங்களின் மூலம் சொல்லிய கருத்துக்கள் என்றென்றைக்கும் ஆழ்ந்து சிந்திக்கக்கூடியவையாக இருக்கின்றன.

176

காகிதச்சுவடி ஆய்வுகள்