உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அ. அறிவு நம்பி தமிழ்ப் பேராசிரியர் புதுவைப் பல்கலைக்கழகம்

புதுச்சேரி

கந்தவருக்கச் சந்தவெண்பா ஓர் அறிமுகம்

இராமநாதபுரம் சமஸ்தான வித்துவானாகப் பணிபுரிந்த சரவணப் பெருமாள் கவிராயர் இயற்றிய மூன்று சிறு நூல்களின் தொகுப்பு 1878 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. நூலினுள்

1) கந்தவருக்கச் சந்த வெண்பா 2) மதுரைக் கயற் கண்ணிமாலை

3) அடிமடக்கு ஆசிரிய விருத்தம்

ஆகிய இலக்கியங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் முதலாவதாய கந்தவருக்கச் சந்த வெண்பாவின் முன்னட்டைச் செய்திகள் வருமாறு : பிள்ளையார் சுழியினையடுத்து, வேலு மயிலும் என மட்டும் பொறிக்கப் பெற்றுள்ளது. அக்காலத்தில் 'துணை' என்பது போன்ற பின்னொட்டுகள் தேவையில்லாது சொல்லாட்சிகள் அமைந்திருந்தன போலும்.

அதற்குச் சற்றுக் கீழாக.

இராமநாதபுரம் சமஸ்தான வித்துவான்

ம. ள. ள. ஸ்ரீ துவாத்திரிம் சதவதானி சரவணப் பெருமாள் கவிராயரவர்களியற்றிய கந்தவருக்கச் சந்தவெண்பா

என்ற வரிகள் காணக்கிடக்கின்றன. நூலை அச்சாக்க உதவியோரைப்பற்றிய குறிப்பாகவும் அச்சுக்கூடம்பற்றிய குறிப்பாகவும் கீழ்க்காணும் வரிகள் முகப்பட்டையின் கீழ்ப்புறம் அமைந்துள்ளன.

இஃது

காரைக்கால் ம.ள. ள. ஸ்ரீ

குமாரசாமி செட்டியாரவர்கள்

ஷையூர்

ம. ள. ள. ஸ்ரீ மாணிக்க செட்டியாரவர்கள்

காகிதச்சுவடி ஆய்வுகள்

177