உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஷை யூர் ம.எ.எ.ஸ்ரீ இராமசாமி செட்டியாரிவர்களால் காரைக்கால்

முகம்மதுஸமதானி என்னு மச்சுக் கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது. ஈசுர பங்குனி மீ

இந்நூலின் ஆசிரியர் சேதுபதி மேல் விறலிவிடுதூது பாடிய முதலாவது சரவணப் பெருமாளின் பெயரரான இரண்டாவது சரவணப் பெருமாள் கவிராயர் என்று அறிய முடிகின்றது. இந்நூலின்கண் பாயிரம் - 1 வெண்பா + 1 வெண்பா + நூல் - 102 வெண்பாக்கள் + வாழி வெண்பா - 1 என 104 வெண்பாக்கள் உள. நூலுக்கு முன்னதாகப் பண்டை நெறிப்படிச் சாத்துக் கவிகள் தென்படுகின்றன. முதலாவது சாத்துக் கவியாக ஆற்றங்கரைச் சமஸ்தானம் ம. ள. ள. ஸ்ரீ கடிகை அங்கமுத்துப் புலவரவர்களியற்றிய அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் இடம் பெறுகிறது. இரண்டாவதாக மேற்படி சமஸ்தானம் சிதம்பர குமாருக் கவிராயரவர்களியற்றிய தாழிசை ஒன்றும், மூன்றாவதாக மேற்படி சமஸ்தானம் தானாபதி சீனிவாச ராயரவர்கள் இயற்றிய கழிநெடில் விருத்தம் ஒன்றும் நான்காவதாக ஷை சொக்கலிங்கம் பிள்ளை இயற்றிய மேற்படி விருத்தம் ஒன்றும் உள்ளன. தொடர்ந்து வருகின்ற இரண்டு விருத்தங்களில் முதல் விருத்தத்தின் மேற் பகுதியில் இந்நூலியற்றியவரின் கனிட்டராகிய இராமசாமிக் கவிராயரியற்றிய விருத்தம் எனவும் இரண்டாவது பாடலின் மேல் மேற்படி கனிட்டராகிய லட்சுமணப் பெருமாள் கவிராயரியற்றிய மேற்படி விருத்தம் எனவும் சொற்றொடர்கள் காணப் பெறுகின்றன. நிறைவுப் பகுதியில் "இந்நூலியற்றியவரது மாணாக்கராகிய திருமலைராயன் பட்டணம் ம. எ. எ. வேலு பாத்தியாயர் இயற்றிய மேற்படி விருத்தம்" என்ற தலைப்பின் கீழ் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது.

இப்பகுதியின் வழியாக நூலியற்றுவோர் தம்மையொத்த புலவர் பெருமக்களிடம், பிற மாந்தர்களிடம் முதலாவதாகவும், தம் குடும்பஞ் சார்ந்தார் அல்லது அவருக்கிணையாவர்களிடம் அடுத்தும் மாணவர்களிடம் அதற்கடுத்தும் சாற்றுக் கவிகள் வாங்கியுள்ளமை புலனாகும். கவிபுனைவோரில் புலவர். கவிராயர் போன்ற பின்னொட்டுகளைப் பாவலர்கள் பெற்றிருக்கச் சேனைக்குரியவர் 'தானாபதி சீனிவாசராயர்' என 'ராயர்' பின்னொட்டுடன் காணப்பெறுவது குறிக்கத்தக்கது. படையாளி படைப்பாளியாகவும் உள்ளார்.

178

இவர்களின் பாடல்கள் புலப்படுத்தும் செய்திகள் வருமாறு:

1. இராமநாதபுரம் என்ற பெயரின் சுருக்கம் முகவை என்பதாம்.

2. இராமநாதபுரம் மன்னரின் பெயர் சொக்கலிங்க துரை என்பது. அவரே இந்நூலை எழுதப் பணித்தவர்.

3. இந்நூல் முருகப் பெருமானைப் பாடிப் பரவிட உருவாக்கப் பெற்றது.

4. வருக்கச் சந்த வெண்பா எனும் புதுவகை இலக்கியமாக இந்நூல் வடிவமைக்கப் பெற்றுளது.

5. சரவணப் பெருமாள் சரசுவதியனையவர் எனப் புகழத்தக்க ஆற்றலுடையவர். காகிதச்சுவடி ஆய்வுகள்