உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சில புகழுரைகள் வருமாறு :

i i அரிய மாங்கனிக்காகக் கந்தன் பாரைச் சுற்றிவர, மூத்தவரான பிள்ளையாரோ வேறு வழியில் அக்கனி பெற முருகனுக்கு வசையேற்பட்டது. 'அது இன்று அகன்றது என முருகன் மகிழ்வு கொள்ளுமாறு பாற்கடலிலிருந்து எழுந்த மதியம் போல் இந்நூல் இலங்குகிறது.

ii. "பெருமை வருக்கச் சந்தவெண்பாவைக் கேட்ட செவி பின்னரும்வே றொரு கவிஞர் தங்கவிதை கேட்குமோ?"

iii ஆறுபடையானைப் பற்றிய சரவணப் பெருமாளின் கவிகேட்டு, அதைப் போல் நம்மால் விள்ளமுடியாதெனக் கலங்கி. வேல் கொண்டான் மலையிலிருந்து இறங்கிவிட, 'கள்ளவிழ் வெண்கமல மகள்' வெட்கமுற்று ஆகம் விளம்பினாள்.

கந்த வருக்கம் என்ற சொல்லிற்கு வாசனைப் பொருள்கள் எனப் பேரகராதி விளக்கந் தரும். பிற அகராதிகளும் 'கந்தவர்க்கமும் கிளர் மணப் புகையும் (திருவாத. புரா. திருப்பெருந். 70) எனும் இலக்கிய வரியைச் சுட்டும். இந்த எடுத்துக்காட்டைச் சுட்டி வாசனைப் பொருட்கள் என்ற பொருண்மையைப் பேசும்.

'வருக்கம் என்பதன் பொருளமையுமாறு முதலில் வரும் பாடல்கள் அகர வரிசையிலும், பின்னர் க.கா.கி.கீ - என மெய்யெழுத்து வருக்கங்களிலும் அமைந்துள்ளன. வெண்பாவில் கந்தனின் அருமை பெருமைகளை மேற் குறித்தாங்கு வருக்க முறையில் பாடப் பெற்றமையால் கந்த வருக்கச் சந்த வெண்பா என்ற தலைப்பு மிகப் பொருந்துவதாகின்றது.

இந்நூலோ கந்தனின் அருமை பெருமையைப் பேசும் வண்ண வெண்பாக்களின் தொகுப்பு என்ற பொருள் புலப்படுமாறு கந்த வருக்கச் சந்தவெண்பா' என்ற தலைப்பினைப் பெற்றுள்ளது. பாயிரத்தில் 'வேள் மேல் வருக்கச் சந்தத்தை வெண்பா' என வருதலான் கந்தவேள்மீது வருக்கச் சந்த வெண்பா பாடுவது நூலாசிரியர் நோக்கமென ஓரலாம்.

பாயிரத்தில் வேள்மாவைப் பாடப்புகுவதை ஆசிரியர் குறித்துக் காட்டுகிறார். மங்கையொருத்தியின் மையல் தீர மயில்வாகனனை நோக்கிப் பாடப்படுவதாக இந்நூலின் நோக்கம் அமைகின்றது.

'நூல்'என்ற உட்தலைப்பின் கீழ் இடம்பெறும் முதலாவது பாடல் வருமாறு:

"அங்கசனம்பாலு மருந்தாய்க்கு மட்டுமா மங்கைக் கங்கசனம்பாலு மருந்தாய்க்கு மட்டுஞ் சுங்கையுண்டா கொஞ்சவளையாவுகுகந்த கொஞ்சுகுயிலால் வருந்தி அஞ்சவளையாள் கடம்பையா" (1)

அந்தப் பெண் மனக்கவலை கொண்டு உருகுவதாகவும் அவளின் துயர் தீர்க்க ஆறுமுகவனே அருள்தர வேண்டுமெனவும் பாடல்களின் கருத்துகள் தொடர்கின்றன. ஒரே சொல்லாட்சிகளை மீளமீளப் பெய்து வெவ்வேறு பொருண்மையில் பயிலவிட்டிருப்பது இப்படைப்பாளியின் திறப்பாட்டை நிறுவும். பு ராண உறவைப் பாடவருங்கால்,

காகிதச்சுவடி ஆய்வுகள்

179