உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உள்ளமுதலைப் பறிப்போர்க் குள்ளமுதலே யானை

உள்ள முதலைப் பகைதீர்த்தோன் மருகா"

என்பன போன்ற வரிகளைச் சுவைத்து மகிழமுடிகிறது. பல்வேறு இலக்கியச் செய்திகளையும், செவிவழிச் செய்திகளையும் இறக்குமதி செய்திருக்கும் இப்பாடல்களில் பலவற்றை அகராதிகள், பேரகராதி போன்றவற்றின் துணை கொண்டுதான் முழுமையாக உணரமுடியும்.

"ஒளவையலுக் கொன்பானை யாண்டான் மருக நித்தம் ஒளவையலுக்குந் தேற்றி"

எனவரும் பாடலில் 'வாலகந்தசாமி' என்ற சொல்லாட்சி காணப்பெறுகிறது. 'பால' என்பதன் மாற்றுச் சொல்லாக 'வால' என்பது இன்றும் சிலருடைய பெயர்களில் இடம் பெற்றிருப்பது உடன் வைத்து எண்ணத்தக்கது.

"கும்பனுக்குஞ் சங்கரனுக்குங் குருவே பிள்ளைமதிக் கும்பனுக்குஞ் சங்குவரிக்கும் குயிலுக் - கும்பயந்தேன்

தென்றலுக்கு மைங்கணைச் சிலம்பனுக்கு மென்செயச்சொல் என்றலுக்கு மங்கை நித்தமே"

என்ற பாடலில் முருகன் குருநாதராய் நின்றமையும், மன்மதன் கணையால் வாடும் மங்கை வாடி நின்றமையும் ஒருசேரப் புலப்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற இருபத்து நான்கு பாடல்களில் பல்வேறு செய்திகளைப் பரிமாறுகின்றார் சரவணப் பெருமாள் கவிராயர்.

அதற்குப் பின் பாடல்கள் 'வெறிவிலக்கல்' என்ற தலைப்பில் இடம் பெறுகின்றன. இப்பாடல்களிலும் முருகன் பெருமைகள் புதிய முறையில் பேசப் பெறுகின்றன.

நல்லறத்தைக்

காதுவரை நந்தவொரு காலயிலெறிந்த முரு காது வரை நந்தன் மருகா"

என்ற வரிகள் ஊன்றிக் கவனிக்கத்தக்கன. 'முருகா' என்ற சொல்லை ஈரடிகளில் வருமாறு பிரித்துப் போட்டு. எதுகை மோனையில் சிறக்கும் நூலாசிரியர் துவரை நந்தன் என்று புதுச் சொல்லாட்சி தருகிறார். கோயம்புத்தூர் என்பது கோவையெனச் சுருங்குமாப்போல் துவராகபுரி என்பது துவரையானமை எண்ணிக் களிக்கப்பாலது. பெரும்பாலான பாடல்களின் முதலிரு அடிகளில் ஒரு சொல்லோ சொற்றொடரோ மீளமீள வந்து பொருண்மையில் மட்டும் மாறுபட்டு நிற்பதால் படிப்பாருக்குப் பொருளறியும் வேலையும் மனவுவகையும் வாய்க்கப் பெறுகின்றன. நூலெழுதப்பட்ட காலத்தில் இவை உரை தேவையில்லாது உணரப் பெற்றிருக்கக் கூடும். சொற்களில் சில இனம் புரியாமல் உணரப்பெறும் ஆபத்தும் உளது.

ஓரு பதச்சோறு:

"போதகங்கை கொண்டுரித்துப் பூண்டார்க்குரைத்த மறைப் போதகங்கையின்ற புதல்வகுக்

T

நாதகங்கை

ஏறுதிருமால்மருக வேழைமயலாலுதக ஆறுதிருமால் விழியினாள்" (5)

180

காகிதச்சுவடி ஆய்வுகள்