உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஒரே வரிக்குள்ளாகச் சொல்லை மீளப் பெய்து, சித்தாடும் போக்கினால் படைப்பாளியின் சதுரப்பாடு தெற்றெனப் புலனாகிறது.

"நூறுதலையா சுரனை நூறுதலை வேலவருள் ஆறுதலை யாறுதலையாய்"

எனவரும் வரிகளில் வெவ்வேறு பொருள்கள் தொனிக்க ஒரே சொல் அடுத்தடுத்து வந்து இன்பம் வளர்ப்பதைப் படிப்பார் உணரவியலும்.

எழுபத்திரண்டு பாக்களில் மேற்குறித்தவாறு மங்கையொருத்தியின் மையல் துயர், முருகனின் அருமைகள் ஆகியவற்றை விரவிச் சரவணப் பெருமாள் கவிராயர் இந்நூலை உருவாக்கியுள்ளார். எழுபத்தி மூன்றாவது பாடல் வாழி பாடும் வாழ்த்துப் பாடலாக அமைக்கப் பெற்றுள்ளது. இஃது அற்றைநாள் மரபென்பது உணரப்பெறுகிறது.

"வாழியயிராணி பெற்ற வாரணமான் வள்ளிமயில் வாழியயிலார் கைம்மலர் வாழி - வாழி பொற்றாள் வாழிவாழி கோழிதோகை வாழிவாழி வாகுவீரர் வாழிவாழி சோதிவேலவன்"

என்ற நிறைவுப் பாடலில் கூடக் கவிராயரின் வித்தகம் புலனாம்.

சிற்றிலக்கியங்கள் பலவுருக்களைப் பெற்றுப் பண்டைக் காலத்தில் புனையப் பெற்றுள்ளன. முற்றிலும் புதிதாகப் பாடவேண்டும் என்ற வேணவா கவிஞர்களிடையே பேரளவில் இருந்தமையால்தான் பல்வேறு இலக்கியங்கள் பிறப்பெடுத்துள்ளன. புலவர்கள் மத்தியில் ஏற்பட்ட அறிவுப் போட்டி' அடிப்படையானது. புலமைக் காய்ச்சல் அல்லது போட்டியினாலேற்பட்ட பொறாமை போன்றவை எழுந்தனவா என்ற வினாவிற்குப் போதிய விடை கிடைக்கவில்லை. ஆனால் புலவர்களின் அறிவுக் கூர்மையும் உழைப்பும் ஒரு சேர அவர்களின் படைப்புகளில் காணப்பெறுவது

என்னவோ உண்மை.

கம்பர் காலத்திலிருந்தே புலவர்களின் ஆற்றலைத் தூண்டிவிடப் புரவலர்கள் இருந்துள்ளமை பதிவு செய்யப் பெற்றுள்ளது. குறிப்பாகப் பல்வேறு மன்னர் பெருமக்கள் புலமையை மதிப்பதையும் புலவர்களை ஆதரிப்பதையும் அன்றாடத் தொழிலாகவே கொண்டிருந்தனர். மன்னர்களின் சிற்றின்ப வேட்கைக்கு உகந்ததாகச் சில 'கிளு கிளுப்பு' இலக்கியங்களும் தோன்றியுள்ளன. உடையார் முன் இல்லாராய் நின்ற போதிலும் கூட அவ்விலக்கியங்களிலும் புலவர் பெருமக்கள் தம் முத்திரைகளைப் பதிக்காமற் போகவில்லை. எனவே. ஆள்வாரின் ஆதரவும். எழுதுவாரின் தேவையும் ஒருங்கிணைந்த நிலையில் பல்வேறு சிறுசிறு இலக்கியங்கள் வடிவு கொண்டிருக்கின்றன. சரவணப் பெருமாள் கவிராயர் 'கந்த வருக்கச் சந்த வெண்பா'வை எழுதுமாறு தூண்டியவர் சொக்கலிங்க துரை என்னும் இராமநாதபுர சேதுபதி என்பது நினைவிற்குரியது. 'சமஸ்தானப் புலவர்' என்ற அடைமொழியும் கவனிக்கப்பெற வேண்டியது. அரசவையிலேயே புலவர்கட்குத் னியிடம் தரப்பெற்று அவர்தம் அறிவுக்கு மரியாதை தரப் பெற்றமையைப் பிற வரலாறுகளும் எடுத்துரைக்கின்றன. சரவணப் பெருமாள் கவிராயரின் மூன்று நூல்களும் ஒரே தொகுப்பில் உள. ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையைச் சார்ந்து இலங்கும். காகிதச்சுவடி ஆய்வுகள்

181