உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கவிராயரின் புலமைத் திறனை இவை நன்கு சுட்டுகின்றன. தம் புலமையாற்றலை வெளிக் காட்டவே இவை போன்ற இலக்கியங்களைப் படைத்துத் தம் நுண்மாண் நுழைபுலத்தைப் புலப்படுத்தினர் புலவர் பெருமக்கள். எவ்வாறாயினும் 'கந்தவருக்கச் சந்த வெண்பா' என்ற தலைப்பில் முற்றிலும் புதிய முறையில், சரவணப் பெருமாள் கவிராயர் தம் மதிநுட்பங் கலந்து தந்துள்ள இந்நூல் படிக்கவும். இன்புறவும். தமிழையறியவும் பயன்படுகிறது என்பது உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை.

182

காகிதச்சுவடி ஆய்வுகள்