உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஜெ. துரைராஜ்

வரலாற்றுத் துறைப் பேராசிரியர் தமிழ்நாடு இறையியல் கல்லூரி மதுரை

வரலாற்றுப் பார்வையில் தலித் கலைகள்

முன்னுரை

தலித் மக்கள் பல்வேறு பெருமைக்குச் சொந்தமானவர்கள் ஆனால் காலங்காலமாகத் தமது பெருமையையும் சிறப்பையும் இழந்து வருகிறார்கள். தலித் மக்கள் சமுதாயத்திலும், சமயத்திலும் பொருளாதாரத்திலும் ஒதுக்கி ஓரங்கட்டப்படும் நிலையில் தங்கள் சிறப்புகளையும் காட்டி வருகின்றனர். மரபுப் பெருமைக்கும் பண்பாட்டுச் செய்திகளை வழிவழியாகக் கொண்டு வருவதுமான தலித் கலைகள் மெல்ல மெல்ல மறந்து. ஏன் நசுக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டு, அடக்குமுறைக் கலைகளைத் தூக்கிப் பிடிக்கத் தொடங்கிவிட்ட இந்நிலையில் தலித் கலைகள் இக்கட்டுரையில் ஆய்வு செய்யப்படுகிறது. தலித் சொல்லும் பொருளும். தலித் சொல் வளர்ச்சி, யார் இந்த தலித்? கலைகள் என்றால் என்ன? என்று வரிசைப்படுத்தி. குறிப்பாகத் தப்பாட்டம்பற்றி ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தலித் சொல்லும் பொருளும்

தலித் என்ற சொல் 'தல்' (Dal) என்ற சமஸ்கிருத வேர்ச்சொல்லிலிருந்து வருகிறது. இதற்கு உடை அல்லது கீழ்ப்படுத்து அல்லது ஒடுக்கு என்பது பொருள். இச்சொல் சமூகப் பொருளாதார எதார்த்த வாழ்வில் உடைக்கப்பட்ட மக்கள் அல்லது ஒடுக்கப்பட்ட மக்களைக் குறிக்கிறது எபிரேய மொழியில் தலித் என்ற சொல் உடல் சார்ந்த தளர்ந்த நிலை; குறிப்பிடத் தகுதியில்லாத நிலை என்ற பொருளில் பயன் படுத்தப்படுகிறது. இச்சொல் அணி (Ani) என்ற இன்னொரு சொல்லுடன் இணையும் போது பொருளாதார நிலையுடன் தொடர்புடைய சொல்லாகிறது. தல் என்ற எபிரேய வினைச்சொல் ஏழ்மை என்ற பொருளில் வெறுமையான. சமமற்ற வறுமையான உலர்ந்து போன. நொடிந்து போன ஏழைகள், எளிதில் மீளமுடியாத பொருளாதார நிலையைச் சுட்டுகிறது என ஹார்வி என்பெர்க்கின்ஸ் கூறுகிறார். தலித் என்ற பொருளாதார அரசியல் நிலையில் ஒடுக்குதலினால் பாதிக்கப்படும் எல்லா நிலைகளிலும் உள்ளவர்களின் உண்மை நிலையை ஆழமான பொருளில் அறிந்து கொள்ளும் சொல்லாகும் என்று M. E பிரபாகர் கூறுகிறார்.

202

காகிதச்சுவடி ஆய்வுகள்