உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அரவிந்து P. நிர்மல் என்பார் தலித் என்ற சொல்லின் பொருளை ஆறு வகைப்படுத்துகிறார்.

1. உடைந்த, கிழிந்த, வெடித்த, தெளிந்த

2. திறந்த, விரிந்த

3.இரு கூறாக

4. துரத்துண்ட வெளியேற்றப்பட்ட சிதறிய

5. ஏழ்மையான பிழியப்பட்ட அழிக்கப்பட்ட

6. வெளிப்படுத்தப்பட்ட காட்சிப் பொருள்

தலித் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியன்று மாறாகச் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட நொறுக்கப்பட்ட என்னும் பொருளோடு உரிமைகள் மறுக்கப்பட்டு. மனிதராக மதிக்கப்படாத அவல நிலையில் உள்ளோரைக் குறிக்கும் சொல் என்ற உண்மையினை உணர்ந்து கொள்ள வேண்டியது இக்காலத்தின் கட்டாயமாகும்.

யார் இந்த தலித்?

1. பொருளாதார அடிப்படைப் பிரிவுகள்:

2 சமூக சாதிப் பிரிவுகள்

சுரண்டும் பணக்காரவர்க்கமும்

ஏமாற்றப்பட்ட ஏழைகளும்

3. பாலியல் பிரிவுகள்

4. வர்க்கப் பிரிவுகள்

5. சமயப் பிரிவுகள்

ஆதிக்கம் செலுத்தும் உயர்

சாதியினரும் VS தீண்டப்படாத பெருவாரியான சாதியினரும்

ஆதிக்கம் செலுத்தும் ஆண்களும் அடிமைப்படுத்தப்படும் பெண்களும்

ஆரியரும் VS திராவிடரும் முன்னேறியவர்கள் VS பழங்குடியினர்

பெருவாரியான இந்துக்கள் VS

சிறுபான்மையான இஸ்லாமியர்,

கிறிஸ்தவர்கள், சீக்கியர் பிறர்.

6. பண்பாட்டுப் பிரிவுகள்

சமஸ்கிருதப் பண்பாட்டு

மேலாண்மை VS உருக்குலைக்கப் பட்ட பண்பாடு (திராவிடர். பழங்குடியினர்)

தலித் மக்கள் சமுதாயத்திலும் இறையியலிலும் இடம் பிடிக்கின்றவர்கள். இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் நிலையில் இருக்கின்ற ஏழைகள். அட்டவணைப்படுத்தப்பட்ட சாதி (Scheduled Caste) பிற்படுத்தப்பட்ட சாதியினர் (Lowest Ranks of the Caste Hierarchy) பழங்குடியினர் ஏழைகளாகப் பிறந்து ஏழைகளாக மரிக்கின்ற மக்கள் பிறப்பிலேயே சாதியாலும் வகுப்பாலும் தாழ்வு காகிதச்சுவடி ஆய்வுகள்

203