உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நிலைக்குத் தள்ளப்படுகின்ற மக்கள். தங்கள் அடிப்படைத் தேவைகளான உணவு. இருப்பிடம் மற்றும் அறிவு சார்ந்த தேவைகளைச் சந்திக்கப்படாத நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் தலித் ஆவர். மேலும் உழைப்பாளிகளை நிலமற்ற தொழிலாளர்கள். சிறு விவசாயிகள், சமூக அமைப்பிலும் பண்பாட்டிலும் அடிமைப் படுத்தப்படுகின்ற பெண்கள் மற்றும் நசுக்கப்படுகின்ற குழந்தைகள் தலித்துகள் ஆவர்

தலித்துகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சமுதாயத்தின் விளிம்பிற்குள் தள்ளப்பட்டவர்களும். தாழ்த்தப்பட்டவர்களும்,வருணாசிரம தர்மத்தால் வஞ்சிக்கப்பட்ட வருமாவர், சாதியற்றவர்கள். சாதிக்குப் புறம்பானவர்கள். மிலேச்சர்கள், பஞ்சமர்கள். தீண்டத்தகாதவர்கள் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட மக்களே இன்று தலித் என அழைக்கப்படுகின்றனர். இம்மக்களின் வாழ்வு நிலையோடு தொடர்புடையது கலைகள்,

கலைகள்

மனிதருக்கு இயல்பாகத் தோன்றுகின்ற உணர்வு கலையுணர்வு. உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிகளின் வெளிப்பாடே கலைகள். மனித உறவுகளையும் வாழ்க்கைக் குறிக்கோள்களையும் ஒழுங்குபடுத்துவதற்கான சமுதாயத்திடம் காணப்படும் நுட்பமான கருவியே கலை. எனவே கலை என்பது மனித வாழ்வில் ஒன்றோ டொன்று பின்னிப் பிணைந்து காணப்படும் ஒன்றாகும். அழகு, சுவை, பயன், கற்பனை, உணர்ச்சி. அறிவு, உறவு. வாழ்க்கை, குறிக்கோள், இன்பம், துன்பம், எதிர்பார்ப்பு. நகைச்சுவை. விடுதலை போன்ற தகவல்களைப் பரப்பக்கூடிய கூறுகளை உள்ளடக்கியுள்ளது.

1

கலைகளின் வளர்ச்சி நிலையை மூன்று பிரிவாகக் கொள்ளலாம்.

தொன்மைக் கலை

2. நாட்டுப்புறக் கலை

3.

செம்மைக் கலை

(Primitive art)

(Folk art)

(Classical art)

தொன்மைக் கலையைப் பழங்குடி மக்களிடையேயும் (தலித் மக்கள்) நாட்டுப் புறக் கலையை நாட்டுப்புற மக்களிடையேயும் (தலித் மக்கள்) செம்மைக் கலையை உயர்குடி மக்களிடையேயும் காணலாம்

தொழிலும் தொழில் சார்ந்த மக்களையும் உள்ளடக்கியுள்ள கலை தொன்மைக் கலையும், நாட்டுப்புறக் கலையுமாகும் எனவே இவ்விரு கலைகளையும் தலித் கலைகள் என்று கூறலாம்.

தலித் கலைகள்

பண்டைக கால மக்கள் இயற்கையோடியைந்த வாழ்வு நடத்தி, பல கலைகளையும் உருவாக்கி மகிழ்ந்தனர். மன மகிழ்ச்சி ஒன்றே முக்கிய நோக்கமாக இருந்தது மனித உணர்வுகளுக்குக் கலைகள் வடி காலாய் இருந்தன. தலித் கலைகள் நாட்டுப்புற மக்களின் உயிர் நாடியாகும். இக்கலைகளை உழைப்போர் கலை என்றும் கூறலாம் தலித் கலைகள கிராமக் கடவுள் வழிபாட்டுடனும் விழாக்களுடனும் காகிதச்சுவடி ஆய்வுகள்

204