உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடர்புடையதாகும். தலித் மக்களின் கலைகளும் வாழ்வியல் எதார்த்தங்களும் முன்னிறுத்தப்படுகின்றன. இக்கலைகள் தொழிலும் தொழிற் களமும் சார்புடையதாக விளங்குகின்றன. மக்களின் வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புடையது தலித் கலைகள்: உற்பத்தி உறவுகளோடும், இன வாழ்க்கையோடும் பின்னிப் பிணைந்தவைகளாக விளங்குகின்றன. இவை தொழிற் சார்பு. விடுதலை போன்ற கூறுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன.

குறவன் குறத்தி ஆட்டத்தில் தாமே உருவாக்கி உற்பத்தி செய்த பாசி. மணி சீப்பு போன்ற பொருள்களைப் பண்டமாற்றுப் பெற வேண்டி

"பச்சப்பாசி பவளப்பாசி வாங்கிலியோ ஆயாலோ பச்சைப் புள்ளைக்குக் கோத்துப் போட்டா நல்லா இருக்கும் ஆயாலோ, தா அசக் அசக்

எனக் குறவனும் குறத்தியும் தமது உற்பத்திப் பொருளகளை ஆடிப்பாடிக் கூட்டம் சேர்த்து விவரங்கள் கூலி விற்பனை செய்வதும் குறி நிகழ்த்தும் தன்மையிலும் உற்பத்தி உறவுகளோடும். இன வாழ்க்கையோடும் தலித் கலைகள் பின்னிப் பிணைந்திருக்கின்றன. வகை வகையான துடைப்பங்கள். செருப்புகள், இசைக் கருவிகள். கயிறு. பாய். முறம் போன்ற சிறு சிறு உற்பத்திப் பொருள்களை ஆடிப்பாடி. தங்கள் கலைகளை வெளிப்படுத்தி விற்பது தலித் கலைகளின் சிறப்புத் தன்மையாகும். தலித் கலைகளில் சிலவற்றை இப்பகுதி ஆராய்கிறது.

சிலம்பாட்டம்

சிலம்புதல் என்பதற்கு ஒலித்தல் என்று பொருள். இக்கலை வீரத்தைக் காட்டவும், தற்காப்புக்காகவும் பயன்பட்ட வீர விளையாட்டுக் கலையாகும். நுட்பமான செயல் திறன்களையும் சிலம்பாட்டக் கலை விளக்குகிறது.

காவடி ஆட்டம்

முருகனுக்குக் காவடி எடுத்து ஆடுதல் காவடி ஆட்டமாகும். காவடி ஆட்டத்தை இயக்குவது தலித் கலைகளாகிய தப்பு ஆட்டமும், நையாண்டி மேளமும் என்று சொன்னால் மிகையாகாது.

கரகாட்டம்

கரகாட்டம் மாரியம்மன் தொடர்புடையதாகும். இந்த ஆட்டத்தை இயக்குவதும் தலித் கலைகளாகிய தப்பும், நையாண்டி மேளமும் ஆகும். கும்மி

பெண்கள் ஆடும் ஆட்டங்களில் கும்மி ஆட்டம் சிறப்புடையதாகும். இக்கும்மி பெண்களை விடுதலை வாழ்வுக்கு இட்டுச் செல்வதும். ஒற்றுமையை வளர்க்கவும் உதவுகின்றன.

ஒயில் கும்மி

தலித் கலைகளில் மற்றொன்று ஒயில் கும்மியாகும். ஆடவர் ஆடும் காகிதச்சுவடி ஆய்வுகள்

205