உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆட்டம் தமிழ்ப் பண்பாட்டின் சின்னமாக விளங்குகிறது. ஆடவர் தலையில் முண்டாசும். கழுத்தில் பூமாலையும், காலில் சலங்கையும் அணிந்திருப்பர். கையில் கைக் குட்டை வைத்திருப்பர்.

கோலாட்டம்

இரண்டு கோல்களைப் பயன்படுத்தி ஒன்றுடன் ஒன்று மோதி ஒலி எழுப்புகின்ற ஆட்டம் கோலாட்டமாகும்.

பொய்க்கால் குதிரையாட்டம்

காலில் கட்டையைக் கட்டிக் கொண்டு குதிரை போன்ற உருவில் குதிரையில் அமர்ந்து சவாரி செய்வது போன்ற தோற்றத்துடன் ஆடும் ஆட்டமே பொய்க்கால் குதிரையாட்டமாகும். இவ்வாட்டத்தை ஆடச் செய்வது தலித் கலைகள் (நையாண்டி மேளம். தப்பு) இக்கலைக்கு மராத்திய மன்னர்கள் பெரும் ஆதரவு தந்தார்கள்.

பிற ஆட்டங்கள்

கழியல் ஆட்டம், கரடி ஆட்டம், வர்ணக் கோடங்கி ஆட்டம், புலி ஆட்டம், பேயாட்டம். பாவை ஆட்டம் போன்ற ஆட்டங்களும் தலித் ஆட்டங்களாகும். வில்லுப் பாட்டு

நாட்டுப்புறக் கலையிலும் தலித் கலைகளில் மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றிருப்பது வில்லுப்பாட்டு ஆகும். வில்லடித்துப் பாடுதல் வில்லுப் பாட்டின் உறுப்புக்களாக அமைந்த இசைக் கருவிகள், வில், உடுக்கை, குடம், தாளம். கட்டை, பம்பை. உறுமி. தக்கை, துந்துபி எனத் தலித் கலைக் கருவிகளே வில்லுப் பாட்டை இயக்குகிறது.

இதுகாறும் தலித் மக்களிடையே வழக்கத்திலிருந்து வரும் பல்வேறு கலைகள் பற்றிச் சுருக்கமாக ஆராயப்பட்டன. அடுத்து தப்பாட்டாத்தைக் குறித்து விரிவாக ஆராய்வது பொருந்தும்.

தப்பு

தப்பாட்டம் என்பது தப்பான ஆட்டமன்று அது சரியான ஆட்டமாகும். தப்பைத் தொட்டால் தீட்டு. தப்பை அடித்தால் அசுத்தம் என்ற நிலையில் தப்பு தலித் மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த பறைதான் இந்தத் தப்பு. போர்க் குணம் மிக்கதும். தாளம் கொண்டதுமானதான் இக்கலை. சிறப்புப் பெறுவதோடு இன்னும் இக்கலை அனைவருடைய ஒப்புதலும் பெற வேண்டும். தவிலோசைக்கும், மிருதங்க ஒசைக்கும் இருக்கும் மதிப்பு தப்போசைக்கும் கிடைக்க வேண்டும்.

இம்மண்ணின் கலைகள் வரலாற்றுச் சின்னங்கள். வரலாறுகள் மாறும்போது

பல படிப்பினைகளையும் நமக்குத் தருகின்றன.

206

"தப்பாட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மாறுதலான அனுபவமாகி இரத்தத்தில் இலேசான துடி துடிப்பு ஏறுவதை

காகிதச்சுவடி ஆய்வுகள்