உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உணர முடியும்

பதினான்காம் நூற்றாண்டில் கல்வெட்டுகளில் தப்பு சேவை என்கிற சொல் இருக்கின்றது?

தப்புதல் என்றால் அடித்தல் என்பது பொருள், தப்பாட்டம் திராவிட மொழிகள் அனைத்திலும் ஒரே பொருளிலேயே வழங்கப்படுகிறது. இது தெய்வ வழிபாட்டுடன் இணைந்ததாகவே இருந்திருக்கிறது. கிராமத்தில் குழந்தை பிறக்கும்பொழுதும், பெயர் வைக்கும்பொழுதும். ஒரு பெண் பூப்படையும்பொழுதும். திருமணம் மற்றும் திருவிழாக்கள் நடக்கும்பொழுதும் வெற்றி பெறும்பொழுதும் தப்பாட்டம் சிறப்பிடத்தைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இத் தப்பாட்டம் பிற்காலத்தில் சாவுக்கு மட்டும் அடிக்கும் பழக்கமாகி விட்டது. இத்துடன் நவீனம் என்ற பெயரால் இக்கலைகளை அழிக்கின்ற முயற்சியும் ஒருபக்கம் நடைபெறுகிறது. தப்புக் கருவியில் தகிட தகிட என்ற திஸ்ர நடையும் தகதிமி தகதிமி என்ற சதுஸ்ர நடையும் வாசிக்கிறார்கள் இதனுடன் கண்ட நடையும் வாசிப்பதுண்டு. இப்பொழுது சரியான தாளத்துடன் தொடர்ந்து இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை ஆடக் கூடிய அளவுக்குத் தப்பாட்டம் வளர்ந்துள்ளது.

தப்பாட்டக் கலைஞர் தப்புக் கருவியை உருவாக்குகின்றனர். முதலில் வேப்ப மரத்தின் வேர்களை வட்ட வடிவத்தில் தப்புக் கட்டையைக் கடைந்து கொள்ள வேண்டும். எருமைக் கன்றுக் குட்டியின் தோலை முடி யெல்லாம் நீக்கிப் பதப்படுத்தி நன்றாக ஊற வைக்க வேண்டும். புளியங்கொட்டையை அறைத்துக் காய்ச்சி, பசை உண்டாக்கி, அப்பசையை வளையத்தின்மீது தடவி. தோலை வளையத்தின் மீது ஒட்டி. தோலின் ஓரங்களில் சிறு சிறு துளையிட்டுக் கயிற்றினால் இழுத்துக் கட்ட வேண்டும். பின்னர் வெயிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பின்னர்க் கயிற்றை அப்புறப்படுத்த வேண்டும். தீயில் காய்ச்சுவதற்கு முன்பே தீம் என்ற ஒசை எழுப்பக்கூடியதாக ஆகிறது. பின்னர் இத் தப்பைத் தப்பாட்டத்திற்குப் பயன்படுத்தலாம்.

இத் தப்பைத் தோளில் தொங்க விட்டு வயிற்றுப் பகுதியில் இடுக்கிக் கொண்டு மேலே மெல்லிய குச்சி, கீழே தடிமனான குச்சியில் தாள லயத்துடன் அடிக்க தப்பில் எழுகிற ஒலி காதுகளுக்கு இனிமையைக் கொடுக்கிறது.

இந்தத் தப்புக்கு வழி நடத்துவது துடும்பு என்னும் தோல் கருவியாகும். சிறு நாதஸ்வரம், தவில் ஆகியவற்றை இணைத்து. காலில் சலங்கைச் சத்தத்துடன் ஆடுகிறார்கள்.

"தப்பாட்டத்தின் சிறப்பு அதன் அழுத்தமான சப்தம். எந்த அளவுக்கு தப்பில் அதிர்வு உண்டாகிறதோ அந்த அளவுக்கு ஆடுகிறவர்களின் உடம்பிலும் அது பிரதிபலிக்கும்.3

1 அகிலா நியூஸ் தமிழர்கள் மறந்ததும் மறக்காததும் ப. 20.

2. மேலது ப 23

3. மேலது. ப 23.

காகிதச்சுவடி ஆய்வுகள்

207