உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




விளம்பம் அல்லது மத்திமத்தில் தொடங்கிப் படிப்படியாக ஓசை உயர்ந்து கூடித் துரித கதியில் போய் முடியும் இதுதான் கிராமியக் கலையின் அல்லது தலித் கலையின் தீவிரம் என்று கூறலாம்.

தப்பை எழிலுடன் வாசித்தபடி விதவிதமான ஆட்டங்களுடன் கூடிய அடிகளுடன் ஆடுவதற்கே தனி வலு தேவை. உடல் வலுவை அடிப்படையாகக் கொண்ட இக்கலையின் உயிரான இன்னொரு செய்தி அதன் வேகம். இக்கலையில் அதற்குத் தகுந்த உடலசைவு. நெருங்கி நின்று பார்க்கும் போது மனத்தில் ஒருவிதமான எழுச்சியை உண்டு பண்ணக்கூடிய சாத்தியமிருப்பது தெரியவரும்.

தப்பாட்டம் நிகழ்ச்சி முடிந்த பிறகும் வெகு நேரம் அதன் அதிர்வு ஆட்டம் மனத்தில் நிலைத்திருக்கின்றது. எந்தக் கலைக்குமில்லாத ஈர்ப்புச் சக்தி இக்கலைக்கு உண்டு

கிராமிய உடையுடன் தலையில் ஒரு ரிப்பன் கட்டிக் கொண்டு எட்டிலிருந்து பத்துப் பேர் வட்டமாகவும் எதிரெதிராகவும் தப்புக் கருவியை வாசித்தப்படி, காலில் சலங்கைச் சத்தத்துடன் அடிகளை எடுத்து வைத்து ஆடுகிறார்கள் தப்பில் வேகம் கூடக் கூட ஆட்ட வேகமும் அதிகரிக்கும் ஆண்கள் மட்டுமே ஆடிய இக்கலை இன்று பெண்களுக்கும் பயிற்சி கொடுத்து அவர்களும் ஆடி வருகின்றனர்.

ஞ்சை. பெரியார். மதுரை மாவட்டங்களில் வாழும் தலித் மக்களிடம் இக்கலை பிரபலம் பெற்றிருக்கிறது தற்காலத்தில் இக்கலைஞர்கள் மேலை நாடுகளுக்குச் சென்று அங்கு பாராட்டப்பட்டனர். அரசு நிகழ்ச்சிகளிலும், தேசிய நிகழ்ச்சிகளிலும் இக்கலை இடம் பெற்றிருக்கிறது. தப்பாட்டக் கலைஞர்களின் ஒற்றுமையோடு தங்கள் உரிமைகளை அரசாங்கத்திடமும் மக்களிடமும் கேட்டுப் பெற ஒரு சங்கம் மதுரை மாவட்டத்தில் தமிழ் நாடு இறையியல் கல்லூரியின் ஆதரவுடன் தொடங்கப்பட்டுள்ளது. பல நவீன நாடகங்களில் தப்பாட்டம் இடம் பெற்றிருப்பது அதற்கு மேலும் மெருகு சேர்த்திருப்பதையே காட்டுகிறது.

முடிவுரை

தலித் கலைகள் சமூக மேடைகளாலும். சாதிய அடக்கு முறைகளாலும். அரசாட்சிகள் மாறியதாலும், படை யெடுப்புகள் பலமுறை நடந்தமையாலும். சுதந்திரப் போராட்டம் வேண்டி அனைத்துத் தரப்பினரும் ஒன்று சேர்ந்து மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்பட அவர்தம் கலை இலக்கியங்களைப் பயன்படுத்திய முறைகளாலும் தலித் கலைகளின் வடிவங்கள் இன்று பிறவற்றில் கலக்கப்பட்டன. தலித் மக்களை ஓரங்கட்டுவது போன்று தலித் கலைகளில் ஓரங்கட்டப்பட்டு மரபுச் சொத்துக்களை அலட்சியப்படுத்தியும் இழிவுபடுத்தியும் பல இன்று வருகின்ற நிலை இருப்பது வருந்துதற்குரியது. ஆனால் தலித் கலைகள் தொழில் வளர்ச்சிக்கு. இன வேற்றுமையின்மை. இன எழுச்சி ஒற்றுமை. நம் நாட்டின் பண்பாட்டினைப் பேணிக் காக்கும் பெருமை. மனித வாழ்வின் விடுதலைக் கூறுகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள சிறப்பினையுடையது கருதப்பெற்ற இக்கலை மனித மாண்பை வெளிப்படுத்துகிறது. மிகச் சரியான கலையாக தவறானதாகக் இன்று புது வடிவம் பெற்று வருவதும். இக்கலையை எல்லா நிலைகளிலும் காகிதச்சுவடி ஆய்வுகள்

208