உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தே.கோபாலன் தொல்லியல் அலுவலர் நாகர்கோவில்

நாஞ்சில் குறவன் வரலாறு

சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் நாஞ்சில் குறவன் வரலாறு (டி எண். 3919) தொடர்பான காகிதச் சுவடி உள்ளது.

கோட்டாரில் இருக்கும் கேசவன் அண்ணாவி காரியக்கார குமாரன் ராமசாமி அண்ணாவியினால் தெரியப்பட்ட வரலாறு தறியாபுத்துவைச் சேர்ந்த நிட்டவணாயன்னா அய்யரால் கி.பி. 1817ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 7ஆம் நாள் இத்தாள் சுவடி எழுதப்பட்டுள்ளது. நாஞ்சில் நாட்டைக் குறவர் பரம்பரையினர் ஆண்டு வந்த விவரங்களை இத்தாள் சுவடி கூறுகிறது.

இலக்கியங்களில் குறவர்

சங்க இலக்கியங்களில் குறவர்பற்றிய குறிப்புகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. குறவர் இனத்தினர் குறிஞ்சி நிலத்திற்குரிய மக்களாவர் பொதியமலைக் குறவர்களைப் பற்றி அகநானூறு கூறுகின்றது. திரிகூடராசப்பக் கவிராயரின் குற்றாலக் குறவஞ்சியும் இங்கு நினைவு கூரத்தக்கது.

கல்வெட்டுக்களில் குறவர்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் நாகலாபுரத்திலுள்ள சிவன் கோயில் முருகன் சன்னதியில் பொறிக்கப்பட்ட கி. பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் 'வேடன் அம்பலக்காரர் தாண்டவன்' எனக் காணப்படுகிறது. இங்கு தாண்டவன் என்ற குறவனுக்கு 'அம்பலக்காரன்' என்ற பட்டப்பெயர் இருந்துள்ளது தெரியவருகிறது. இதிலிருந்து ஒரு கிராமத்திற்குத் தலைவனாகக் குறவனொருவன் இருந்துள்ளது தெளிவாகிறது. கி. பி. 1ஆம் நூற்றாண்டில் 'குறவன்' என்ற தமிளி எழுத்தில் பொறிக்கப்பட்ட சங்க கால மோதிரம் ஒன்று கரூரில் கிடைத்துள்ளது. குறவர் சிற்பங்கள்

கி. பி. 16ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் காணப்படும் குறவன் - குறத்தியரின் சிற்பங்கள் கலை நயத்துடனும் உயிரோட்டமாகவும் வடிக்கப்பட்டுள்ளன. இளவரசியைக் கடத்திச் செல்லும குறவன் கத்திக் குத்து பட்டதனால் அதன் வலியை அவன் முகத்தில் தெரியும் வண்ணம் துல்லியமாக வடித்துள்ளனர். ஸ்ரீவைகுண்டம் பிரம்மதேசம் ஆகிய இடங்களிலும் குறவர் சிற்பங்கள் காணப்படுகின்றன.

210

காகிதச்சுவடி ஆய்வுகள்