உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திருவிழாவில் குறவர்

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் குமார கோவில் திருவிழாவின் போது நம்பிராஜன் எனும் குறவர் தலைவன் வள்ளியை முருகனுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கும் விழா இன்றும் நடைபெற்று வருகிறது.

நாட்டார் வழக்காற்றில் நாஞ்சில் குறவன் வரலாறு

நாஞ்சில் குறவன் தாடகிமலையில் இரும்பைத் தங்கமாக்கும் பச்சிலையைக் கண்டுபிடிக்கிறான். கூடை. பெரம்பு, மொடை செய்து விற்றுப் பணம் வாங்காமல் அதற்குப் பதிலாகப் பழைய இரும்புச் சாமான்கள் பெறுகின்றான். அதைக் கொண்டு பழைய இரும்புகளையெல்லாம் தங்கமாக மாற்றுகிறான். அதனை விற்றுப் பெரும் செல்வந்தனாகிறான். இச்செல்வத்தினைக் கொண்டு மதுரை மகாராசாவிடமிருந்து நாஞ்சில் நாட்டுப் பகுதியை ஆளும் உரிமையைப் பெறுகின்றான். நாஞ்சில் குறவனுக்கு உதவியாக மதுரை மகாராசா அழகப்ப முதலியை உடன் அனுப்பி வைக்கின்றார்.

நாஞ்சில் குறவன் தன் மகனுக்கு அழகப்ப முதலியிடம் பெண் கேட்கிறான். தாழ்ந்த சாதிக்காரன் தன்னிடம் பெண் கேட்டுவிட்டான் என்ற அவமானம் பொறுக்க மாட்டாமல் அழகப்ப முதலி குறவர் கூட்டத்தினரைக் கொல்லுவதற்குப் பொறிப்பந்தல் அமைத்து அதில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்கின்றார். மண மகனையும், மணமகளையும் பந்தலில் உட்கார வைத்து. குறவர் கூட்டத்தின ரனைவரும் பந்தலில் கூடியிருக்கும் வேளையில் பொறியைத் தட்டடா புத்திகெட்ட ஆசாரி என அழகப்ப முதலி கூறியவுடன் பொறி தட்டி கல் மண்டபம் சரிந்து விழுந்து குறவர் கூட்டத்தினரனைவரும் மாண்டு விடுகின்றனர். இது நாட்டார் வழக்காற்றில் தெரியவரும் நாஞ்சில் குறவன் வரலாறாகும்

இப்பகுதியில் அமைந்துள்ள வயல் 'குருதி வயல்' என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. இங்கு வயலுக்கு அடைக்கும் தண்ணீர் சிவப்பாய் இருப்பதாகக் கூறப்படுகிறது. அழகப்ப முதலி பெண்ணைக் கொன்றதால் அவர் வீட்டில் பெண் வாரிசே இல்லை எனக் கூறுவது நாட்டார் வழக்காறு. முதலியார் சமூகம் மதுரையிலிருந்து குமரி மாவட்டத்திற்கு வந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

தாள் சுவடியில் நாஞ்சில் குறவன் வரலாறு

தாள் சுவடியில் காணப்படும் செய்திகள் அதில் உள்ளவாறே இப்பகுதியில் தரப்படுகின்றன.

திருவிதாங்கோடு சமஸ்தானத்துக்கு சேர்ந்த அகஸ்திசுரமண்டபத்தின் வாதிக்கலு ரெண்டு தாலுக்கும் கூடிய பனிரெண்டு பிடாகை என்கிற பனிரெண்டு மாகாணமும் சேர்ந்த சீர்மைனாஞ்சினாடு ஆண்டு வரப்பட்ட நாஞ்சில் கொறவன் வரலாறு சத அளயஎ செனவரி மீ" எs தறியாபுத்து நிட்டலனாயன்னா அய்யற்

பூற்வம் சேற சொள பாண்டியர் தொரத்தனங்கள் நின்று மனேமனே அறசர்களாகவும் கண்டவரெல்லாம் வேட்டக்காறறாக இருக்கிறதாளையில் கோணங்கிக் கொறவனென்றொனு கொறவன் உண்டு. அந்தக் கொறவன் யீசசன் காகிதச்சுவடி ஆய்வுகள்

211