உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பலவானாகவும் [செ]ணைகள் செனங்களையும் வச்சுக் கொண்டு ராச்சியபாரம் பண்ணினானென்றும் சொல்லப்படுகிறது.

க. ஷை கோணங்கிக் கொறவன் முப்பத்தஞ்சு வருஷம் ஆண்டு வந்தானென்று சொல்லப்படுகிறது.

உ. ஷைபடியான் மகன் பொம்மயக் கொறவன் தான் கண்ட எண்ணைக் கிணரை வெகு ரகசியமாக வைத்துக் கொண்டு திறமையிலு குடிகளுக்கு மிகவு சகாயக்காரனாக வெகுமதிகள் கொடுத்து தமக்கு ராசயோகமாக உள்ள இரும்பு சாமான்களை வரவழைச்சுக் கொண்டு வெகுபணமும் சொர்ணம் உள்ளவனாக வெகு சனங்களை சேர்த்து பதினாயிரம் தளம் நூறு யானைகள் நூறு கொறவராகிய செனங்களையும் சேத்து வைத்துக் கொண்டு குடிகள் தன் திறமையிலுள்ளவற்கள் யெல்லாம் ஒண்ணுலு குறவில்லாமலிருக்க வேணுமென்று வௌவெல்லாம் குடிகளுக்கே விட்டு கொண்டு தானே ராசாவென்று பெறப்பட்டு குடிகளெல்லாம் வெகுவசியப்படுத்திக் கொண்டு முப்பத்தி ரெண்டு வருஷம் ஆண்டுக் கொண்டு வந்தானென்று சொல்லப்படுகிறது.

ஷை யான் மகன் னஞ்சிக் கொறவன்யென்று வெகுபுத்திவானாக தோன்றி ஆயுதமுஸ்திசுகளும் உண்டாக்கி சுத்துப்பாணையக் காறற்களுக்கெல்லாம் மிண்டறாகவும் யாருக்கும் வணங்காமல் இருக்கிற நாளையில் ஷெ னஞ்சிக் கொறவன் ராஜ்யத்தில் யாதொரு குடிகளும் தொழுளாளிகளும் ஒண்ணுலு கொரவில்லாமல் வெகு சம்பன்னனாகயிருந்து கொண்டு ராசாவுக்கு ராசயோகம் வருடிந்தோரும் யிரிப்புயெனத்தை குடுத்து வருகிற நாளையில் ஷ னஞ்சிக் கொறவனுக்கு பிள்ளைகள் இல்லாதே யிரிந்து அது விசாறந்துடங்கி இருந்தது.

ஷை னஞ்சிக் கொறவனுக்கு எழுவேர் பெண்டாட்டிமாளா கலியாணம் பண்ணினான்.

ஷைனஞ்சி கொறவனுக்கு கடசி பெண்டாட்டியானவளுக்கு ஒரு பிள்ளை பிறந்தது. அந்த பிள்ளை புரந்த உடனே நமக்கு எழிவது வயசுக்குமேல் பிள்ளை பிறந்துதே என்று சந்தோஷப்பட்டு வேண்டிய தற்மங்களை எல்லாம் செயித்து தன்னுடைய ராச்சியத்தில் உள்ள குடிகளை எல்லாரையும் வறித்தி விறிந்து பண்ணி வெகு சந்தோஷத்துடனே குடிகளுக்கெல்லாருக்கும் பாக்கு வெத்திலே சந்தனம் புஷ்பம் குடுத்து நீங்கள் எள்ளு சாதியாரென்றும் கேழ்க்க வேளாழற் ஒசந்த சாதி யென்றும் அறிஞ்சு குடிகள் எல்லோரும் கேழ்க்கத் தக்கதாய் எனக்கு எழிவது வயசுக்கு மேல் பிள்ளை உண்டென்று தெய்வம் கொடுத்து இருப்பதுனாலே இந்த பிள்ளை பிறந்தது எனக்கு வெகு சந்துஷ்டியாச்சுது. ஆனால் என் மனசுலே ஒரு நினைப்பு இருக்கிறது. அதை நீங்கள் நடத்தி அந்த நினைப்பு னடக்கு மட்டியாயி நீங்கள் னம்முட ராச்சியத்தில் உள்ள குடிகள் யெல்லாரும் நடத்த வேணுமென்று சொன்னால் யென்னமோ வென்று அப்போதை சபையிலிருந்த குடிகள் யெல்லாவர்களும் னஞ்சி கொறவன் சொன்ன வாற்தைக்கி அப்படியே னாங்கள் நடந்து கொள்கி றோமென்று சொல்லிக் கொண்டு போனார்கள்.

ஷ னஞ்சி கொறவன் தன் குழந்தைக்கி ஆராமாசத்தில் சொறுணறு காகிதச்சுவடி ஆய்வுகள்

213