உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலியாண மென்று மிகவும் பிறபலமாக ஆறம்பிச்சு குடிகளையெல்லாரையும் வறித்தி அவாளவாளுக்கு வெரெ வேரே ஜாதி மறியாதி பொலெ விறுந்துகளுக்கு பிரயத்தினம் செய்து வெள்ளாழரை குஞ்சி குட்டிகள் சகிதமாயி விறிந்துக்கு வரவேணுமென்று கட்டளையிட்டு யெல்லாறுக்கும் விறிந்திட்டு சபைகுட்டி வெள்ளாழற் தவிற மத்தபெரை யெல்லாம் பாக்கு வெத்திலை செந்தணம் குடுத்துனுப்பி போட்டான்.

வெள்ளாழரையெல்லாம் ஒரு கூட்டமாக கூட்டி னம்முடை கொழந்தை புரந்த சந்தோஷத்தினாளே நான் கேட்டுக் கொண்டதற்கு உங்கள் மனசு மட்டி நடந்து கொள்ளுகிறோமென்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்களே. ஆனகனாலே உங்கள் பொண்ணை என் பிள்ளைக்கு கொடுக்க வேணுமென்று கேட்டான் னஞ்சிக் கொறவன் கேட்ட பேச்சிக்கு வதில் சொல்லத்தோணாமல் வெள்ளாழறனவரும் மனம் குழந்து இருந்தார்கள். அப்போ பெரிய வீட்டு முதலி என குறவர் எனக்கு பெறந்து மூணு மாசமாச்சது உன் பிள்ளைக்கு என் பெண்ணைக் கொடுக்கலாகும் யென்று சொன்னார். பகுமதிகள் குடுத்து பெறிவிட்டு முதலியானுக்கு தன்னுடைய மந்திரியாகவே சகலமும் கொடுத்தான்

வெள்ளாழற்யெல்லோறும் கூடியோசித்து கொறவனை கொண்ணு போட வேணுமென்று நினைத்தார்கள்.

பெறி விட்டு முதலியாற் கொறவனுக்கு மந்திரியாக நின்று நம்முட குழந்தைகள் கலியாணம் எல்லாவரைப் போலே ஒலைப் பந்தல் கூடாது. கல்பந்தலாக வேணுமென்று சொல்லி றாச்சியத்தி உள்ள கல்களையும் கல்த்தச்சமாரையும் வறித்த அஞ்சி வருஷம் கல்பந்தல் வேலை செய்விச்சி பெறி வீட்டு முதலியாற் யோசினைனாலே கல்பந்தலுக்கு பண்டிகள் சூத்திரம் வச்சாற் என்று சொல்லப்படுகிறது

மேலெழிதிய னஞ்சி கொறவன் பிள்ளைக்கு அஞ்சாம் வயசு நிறயற காலத்தில் பெறி வீட்டி முதலியாற் பெண்ணை கலியாணம் பண்ண வேணுமென்று நினைத்து கலியாணத்துக்கு வேண்டியதுகளெல்லாம் வருத்தி சகலமானங்களயும் வருத்தி கலியாணப் பந்தலில் பெண்ணும் பிள்ளையையும் உள்க்காற வைச்சுகிறது தந்திரங்களெல்லாம் நடத்தி நீங்கள் யெல்லாறும் உங்கள் கொறசாதி அனவரும் பந்தலில் இருக்க வேணுமென்றும் பிள்ளை மனைமேல் இருக்க வேணுமென்றும் பொண்ணை பெண்ணை அம்மாள் எடுத்துக் கொண்டு மேள தாளத்துடனே பந்தலில் உள்ள சம பந்தியெனத்தாரை சுத்தி வந்து பின்னே புள்ளை பொண்ணுக்குத்தாலி கட்டுகிற எங்கள் வெள்ளாழசாதி வழக்கமென்று சொல்லி திட்டப்படுத்தி கொறசாதி வகைக்காரரெல்லாரை கல்பந்தலில் உள்காரவச்சி மௌகாறற் ரெல்லாரை கல் பந்தலில் உள்காரவச்சி மௌகாறற் ரெல்லாரை கல் பந்தலில் உன்காறவச்சி மேணகாறற் மத்துள (பேர்) கள் கூடிவெள்ளாழற் யெல்லா பொண்ணை தூக்கிக் கொண்டு மேளதாளத்துடனே கல்பந்தல் சுத்தி வருகிற போது கல்பந்தலுக்கு உள்ள சூத்திரம் திருப்பின உடனே கல்பந்தல் விழுந்து கொறவற்னசிச்சி போனார்களென்று சொல்லப்படுகிறது

நாஞ்சிக் குறவன் ஆண்டபடியினாலே அந்த னாட்டுக்கு நஞ்சினாடென்று பேற்வரப்பட்டதென்றும் கொறவற் பட்டத்துக் குறத்தியரையென்று இப்பவும் தென்றும் சொல்லபடுகிறது.

214

காகிதச்சுவடி ஆய்வுகள்