உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்

நாஞ்சில் குறவன் வரலாறு பற்றி நாகம்மையாவின் திருவிதாங்கூர் மாநில நூல் தொகுதி 1இல் (Travancore State Manual Vol - I} குறிப்பு காணப்படுகிறது டிய நாடு இசுலாமியரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த போது திருவிதாங்கூர் ராஜ்யத்தில் நாஞ்சில் குறவன் நாஞ்சில் நாட்டைக் கைக்கொண்டு குறுநில மன்னனாக இருந்து வந்தான் மதுரை அரசு இசுலாமியரிடமிருந்து விடுபட்ட பிறகு கி.பி. 1117இல் 1292 M. E. திருவிதாங்கூர் மன்னன் நாஞ்சில் குறவனையும் அவனது மக்களையும் விரட்டியடித்தான் என இந்நூல் குறிப்பிடுகிறது. தாள் சுவடி குறிப்பிடும் வரலாறும் காலமும் சிற்சில மாற்றங்களுடன் நாகம்மையாவின் நூலில் காணப்படுகிறது. கோணங்கிக் குறவனே தைலக் கிணற்றைக் கண்டுபிடித்ததாக இந்நூல் குறிப்பிடுகிறது. ஆனால், தாள் சுவடி அவனது மகன் பொம்மையக் கொறவனே கண்டுபிடித்ததாகக் குறிப்பிடுகின்றது நாஞ்சில் நாடு திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்த ஆண்டு கி பி 1817 எனத் தாள் சுவடி குறிப்பிடுகிறது. திருவிதாங்கூர் மன்னன் நாஞ்சில் குறவனையும். அவனது மக்களையும் விரட்டியடித்த ஆண்டு கி. பி. 1117 எனக் குறிப்பிடுகின்றது. இவ்விரண்டிற்கும் 700 ஆண்டுகள் வித்தியாசப்படுகிறது. இக்கால முரண்பாடுகள் இதன் வரலாற்றுத் தன்மையினையும் உண்மையினையும் ஐயப்பட வைக்கிறது.

ஆட்சிப் பரப்பு

நாஞ்சில் கொறவர் ஆட்சியின்கீழ் இருந்த ஆட்சிப் பரப்பு அகஸ்தீஸ்வர மண்டலத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம். தோவாளை ஆகிய இரண்டு தாலுகாக்களுடன் கூடிய 12 பிடாகைகள் எனத் தாள் சுவடி குறிப்பிடுகிறது. தற்போதைய கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம். தோவாளை, கல்குளம், விளவங்கோடு என நான்கு வட்டங்கள் கொண்டதாக விளங்குகின்றது. இவற்றுள் நாஞ்சில் நாடு எனப்படுவது அகஸ்தீஸ்வரம், தோவாளை ஆகிய வட்டங்கள் அடங்கிய பகுதியாகும். கல்குளம் என வழங்கப்பட்டது.

மற்றும் விளவங்கோடு வட்டங்கள் அடங்கிய பகுதி வேணாகும். கல்குளம்

தாள் சுவடி குறிப்பிடும் தாடகிமலைப் பகுதி தோவாளை வட்டத்தில் பூதப்பாண்டிக்குக் கிழக்கேயுள்ள மலைப் பகுதியாகும் குறத்தியறை தலைநகராக விளங்கியுள்ளது. இது இராசதாணி எனத் தாள் சுவடி குறிப்பிடுகிறது. மதுரை மகாராசாவிடம் ரூ1.30.000 விலை கொடுத்து நாஞ்சில் நாட்டில் 25 கோட்டையும் (நெல் விதைப்பு நஞ்சை பூமி) புத்த நாட்டில் 3 கோட்டையும் ஆக உயர் கோட்டை 28உம் நஞ்சை பூமியும் நாஞ்சில் கொறவன் விலை கொடுத்து வாங்கினான் எனத் தாள் சுவடி குறிப்பிடுகின்றது.

அழகப்பமுதலியும், பெரிய வீட்டு முதலியும்

மதுரை மகாராசா நாஞ்சில் குறவனுக்கு அமைச்சராக அழகப்ப முதலியை உடன் அனுப்பி வைத்தார் என நாட்டார் வழக்காறு குறிப்பிடுகிறது. நாயக்கர் ஆட்சியின் போது முதலியார் சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் முக்கியப் பதவிகளில் இருந்துள்ளனர். இவர்கள் மதுரையிலிருந்தே குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளனர். கன்னியாகுமரி காசி விசுவநாதர் கோயில் முக மண்டபத்திற்கு அழகப்பமுதலி ஒரு தூண் கொடையாக அளித்துள்ளார். கி.பி. 18ஆம் நூற்றாண்டு எனப் பொறிக்கப்பட்டுள்ளது. நாஞ்சில் கொறவன் பெண் கேட்ட அழகப்பமுதலி இவர்தானா என்பது ஆய்விற்குரியது. தாள் சுவடியில் நாஞ்சில் குறவன் அமைச்சராகப் பெரிய வீட்டு முதலி என்பவர் குறிப்பிடப்படுகிறார்.

216

காகிதச்சுவடி ஆய்வுகள்