உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குறவர் குடியிருப்புகள்

நாகர்கோவிலிலுள்ள மீனாட்சிபுரம் சாலை முன்பு 'குறத்தியரை முடுக்கு' என வழங்கப்பட்டுள்ளது. இதே போல் திருவள்ளுவர் தெரு முன்பு குறவன் முடுக்கு என வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்து குறவர் குடியிருப்புகள் நகரம் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்திருக்கிறது என ஊகிக்க இடமுள்ளது.

சோறுணறு கல்யாண விழா

தாள் சுவடியில் சோறுணறு விழா குறிப்பிடப்படுகிறது. குமரி மாவட்டத்தில் குழந்தை பிறந்து ஆறு மாதம் கழித்து முதன் முதலில் அக்குழந்தைக்கு அரிசி உணவு கொடுப்பதை ஒரு குடும்ப விழாவாகக் கொண்டாடுவது இன்றும் வழக்கில் உள்ளது. இதனைச் 'சோறு கொடுத்தல்' என அழைக்கின்றனர். பெரும்பாலும் கோயில் பிரசாதத்தை வைத்துச் சோறு ஊட்டுவது வழக்கம். அதில் சோறு, சர்க்கரைப் பாயாசம் மற்றும் மிளகு ஆகியன முதலில் ஊட்டும் உணவாக அமைந்துள்ளது. இதனையே உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் அழைத்து ஒரு விழாவாகக் கொண்டாடுகின்றனர். இதுவே 'சோறுணறு கல்யாணம்' எனத் தாள் சுவடி குறிப்பிடுகின்றது.

தாள் சுவடியில் எடுத்தாளப்பட்டுள்ள மலையாளச் சொற்கள்

இத்தாள் சுவடியில் ஏராளமான மலையாளச் சொற்களும் வடமொழிச் சொற்களும் எடுத்தாளப்பட்டுள்ளன. குமரி மாவட்டமும் கேரளமும் அருகருகே இருக்கும் பகுதிகளாகும். எனவே. மலையாள மொழியின் தாக்கம் குமரி மாவட்டத்தில் காணப்படுவது இயல்பே. தாள் சுவடியில் பயன்படுத்தப்பட்டுள்ள மலையாள மற்றும் வடமொழிச் சொற்களும் அதற்கு இணையான தமிழ்ச் சொற்களும் வருமாறு:

மலையாளச் சொற்கள்

1. ப[பி]ழச்சி கொண்டு

வாழ்ந்து கொண்டு

2. கழிச்சி

வெட்டி நீக்கி

3. சொற்னச் சாய

தங்க நிறமாகி

4. நிளை விளிச்சி

5. தைலக் கிணறு

6.ஆங்ன

7. தொகச்சி

8. வற்திச்சு

9.சேஷ்த்திரங்

10. ஒப்பிச்சுப் போட்டு

71. சகாயக்காரணாக

12. விசாரந்

காகிதச்சுவடி ஆய்வுகள்

கூவி அழைத்து

எண்ணெய்க் கிணறு

அங்கே

நனைத்து

பெருகி (அ) வளமாகி

கோயில்

ஒப்படைத்து

உதவி செய்பவனாக

கவலை

217