உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வழக்குகள் விசாரணை செய்யப்பட்ட பின்னரும். ஒரு சபையிலிருந்து மற்றோர் சபைக்கு மேல் முறையீட்டிற்காக அனுப்பப்பட்டு விட்டாலும் வழக்குத் தொடுத்தவர் சபைக்கு ஒழுங்காக வராதபோதும். முத்திரைப் பத்திரங்களில் வழக்குகள் எழுதப்படாதபோதும் அவ்வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. நீதிமன்றத்தில் குற்றவாளியாக்கப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டவர்க்கு ஆஜர் சாமீன் தரப்பட்டது. அரண்மனையில் குற்றவாளியை எந்த நாளில் ஆஜர் படுத்துவதாகக் கூறிக் குற்றவாளிக்குப் பொறுப்பேற்று ஒருவர் அளிக்கும் உறுதி மொழியானது ஆஜர் சாமீன் ஆகும். நீதிமன்றத்தில் வாதியும். பிரதிவாதியும் நேரில் ஆஜராகித் தங்கள் வழக்குகளை எடுத்துரைத்தனர். வாதிக்கும். பிரதிவாதிக்கும் தனிப்பட்ட முறையில் வாதாடுவதற்காக வழக்குரைஞர்கள் போன்றவர்கள் இல்லை. நீதிபதி இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட பின் தீர ஆராய்ந்து தீர்ப்புகளை வழங்கினார் இதற்காகச் சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இவ்வாறாக மராத்தியர் ஆட்சியின் போது பலவிதமான நீதிமன்றங்களில் பல வகையான வழக்குகள் நடைபெற்றன. 14

தண்டனைகள்

இவர்கள் காலத்தில் குற்றங்களுக்கு ஏற்றவாறு தண்டனைகள் அளிக்கப்பட்டன. மேலும் பெரிய குற்றங்களுக்குப் பெரிய அளவிலான தண்டனைகளும், சிறு குற்றங்களுக்குச் சிறு தண்டனைகளும் வழங்கப்பட்டன.

திருட்டு. பொய்ச் சாட்சி சொல்வது. பொய்ப் பத்திரம் தயாரித்தல், கலப்படம் செய்தல். சுகாதாரக்கேடு விளைவித்தல் போன்றவை குற்றங்களாகக் கருதப்பட்டன. குற்றம் செய்தவர்களுக்குக் கடுங்காவல் அபராதம், கோட்டை எல்லையிலிருந்து நாடு கடத்தல் போன்ற தண்டனைகளுடன் கசையடி பிரம்படியும் விதிக்கப்பட்டன.

திருடுவது மிகப் பெரிய குற்றமாகக் கருதப்பட்டு அத்திருட்டைச் செய்தவர் கடுமையாகத் தண்டிக்கப் பெற்றார் இரும்புச் சங்கிலி திருடியவனைப் பிடித்து 1 மாதம் அவன் கண்களைக் கட்டிக் கால்களில் சங்கிலி பூட்டி அவனிடம் மராமத்து வேலைகள் வாங்கப்பட்டன. பின் சங்கிலியை அவிழ்த்து விட்டு மூட்டையுடன் கோட்டை வெளியில் 4 வீதிகளிலும் அவனை அலையவிட்டனர். ஒவ்வொரு வீதியிலும் கால் முட்டிக்குக் கீழ் பிரம்பால் 12 அடிகள் முதல் 24 அடிகள் வரை அடித்துவிடப்பட்டது சிலரிடம் சென்னைப் பட்டின ரூபாய் நாணயங்களில் அபராதத் தொகையும் வசூலிக்கப்பட்டது.

பொய்ச் சாட்சி, பொய்ப் பத்திரம் தயார் செய்தவர்கள் உடல் முழுவதும் கருப்பு. வெள்ளைப் புள்ளிகளை இட்டுக் கழுதையின் மேல் வால் பக்கம் முகம் இருக்குமாறு உட்கார வைத்துக் கழுத்தில் எருக்கம்பூ மாலைகளைப் போட்டுக் குற்றத்தின விவரத்தைக் கூறி 4 வீதிகளிலும் சுற்றி வர்ச் செய்து 5, 6 ஆண்டுகள் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். மேலும் பொய் முத்திரை தயாரித்தவர்களுக்குக் கன்னத்திலும், நெற்றியிலும் 35 தமிழ் எழுத்துக்கள் பச்சை குத்தப்பட்டன 15

14 மோ.ஆ. குறிப்புகள் 11 13. 19

15

224

மோ.ஆ.

9

காகிதச்சுவடி ஆய்வுகள்