உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குற்றவாளிக்கு இரு மடங்குத் தண்டனை அளிக்கப்பட்டபோது.

அவனுக்காகப் பொய்ச் சாட்சி

'னுைக்கு 1 மடங்கு தண்டனை

விதிக்கப்பட்டிருந்தது. குற்றவாளிக்கு 6 அடி வீதம் 4 வீதிகளிலும் அடிக்கப்பட்டது போல் பொய்ச் சாட்சி சொல்பவனுக்கு 3 அடி வீதம் 4 வீதிகளிலும் அடித்து விடப்பட்டது என்பது தெரிய வருகிறது.

சுகாதாரக்கேடு விளைவிப்பவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப் பட்டிருக்கின்றன. ஆட்டு உரோமம் எரித்து நாற்றம் உண்டாக்கியவனுக்கு ரூ அபராதமாக விதிக்கப்பட்டது. கோட்டையின் நான்கு வீதிகளின் சாக்கடைகளிலும் உள்ள மண்ணை உடனுக்குடன் எடுத்துச் சுத்தம் செய்யாமல் இருந்ததற்காக ரூ 6 அபராதமாகப் பெறப்பட்டதாகத் தெரிகிறது.

பொருட்களில் கலப்படம் செய்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. நெய், விளக்கெண்ணெய்களில் கலப்படம் செய்த வியாபாரிக்கு அபராதம் ரூ 5உம் அரிசிக்காரி நனைந்து போன அரிசியை விற்றதால் அபராதமாக 2 பணமும் வசூல் செய்யப்பட்டிருப்பதை அறியமுடிகிறது.

சிறு சிறு குற்றங்களுக்குத் தண்டனைக்குரிய அபராதமானது பணமாகவும். தேங்காயாகவும் வசூலிக்கப்பட்டிருக்கின்றன.

இரவுக் காவல் வராததால் அபராதம் 1/2

ரூ

16

காவல்காரியை அடித்ததற்கு அபராதம் /2 ரூ

வண்ணான் நாகமுத்து வெளுத்த துணியில் முள்ளிருந்ததால் 6 தேங்காய் அபராதம்

சமையல் செய்ய 11 நாழிகைக்கு அரிசி தர உத்திரவிட்டதைக் காலம் கழித்துக் கொடுத்ததால் 12 தேங்காய்

பணியாளர்கள் ஒழுங்காகப் பணிக்குச் செல்லாததும். பணியின் போது கவனக்குறைவுடன் நடந்து கொள்வதும் சிறு சிறு குற்றங்களாகக் கருதப்பட்டிருப்பது தெரிய வருகிறது

குற்றம் செய்தவர்களுக்கு உடலில் உபத்திரவங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கை இருந்ததாகத் தெரிகிறது என்பது பின்வரும் குறிப்பின் மூலம் அறியமுடிகிறது.17

"வெள்ளிப் பாடகம் திருடியவனுக்கு வயித்துக் கடுப்பு பீங்கான் யானைத் தந்தம் சிவப்புக் கல் திருடியவனுக்குப் பக்க சூலை.

நகை திருடியவனுக்கு கால் வீக்கம்.

ஈயம் பச்சைக் கல் கொடுத்து உருக்கியவனுக்கு காலில் வாயுப் பிடிப்பு

7

16

மோ.ஆ.

2 10

17

மோ.ஆ. 1 36

காகிதச்சுவடி ஆய்வுகள்

225