உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பழங்காலத்தில் குற்றவாளிகளைக் காய்ச்சிய எண்ணெயில் கைவிடச் செய்து

குற்றவாளி தண்டிக்கப்பட்டது போன்று மராத்தியர் காலத்திலும் தண்டனை வழங்கப்பட்டது. இரண்டாம் சரபோசி ஆட்சியின் போது நிலத் தகராறில் சம்பந்தப்பட்ட நபரின் கைகளைக் காய்ச்சிய எண்ணெயில் நனைத்து அவனது குற்றத்தை நிரூபித்ததாகவும் இது கடவுளால் அளிக்கப்பட்ட தீர்ப்பு என்றும் கருதப் பட்டதாகத் தெரிகிறது

நீதித்துறையிலிருந்து கிடைத்த வருவாய்

நீதிமன்றங்களில் வழக்கு மனுக்கள் கொடுக்கும் போது முத்திரை

மனுக்களாக இல்லாவிட்டால் தள்ளுபடி செய்யப்படும்முத்திரை

பொதுவான விதியாகும் எனவே முத்திரைப் பத்திரங்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு அரசாங்கத்திற்கு வருவாய் கிடைத்தது. நீதிமன்றங்கள் முத்திரைப் பத்திரங்களை விற்று வருவாய் சேகரித்தன. நியாயதீச சபை மூலம் (கஜானாவுக்கு) கருவூலத்திற்குக் கம்பெனி ரூ 300 முத்திரைப் பத்திரம் விற்று வரவு வந்தது.18 காவல் வருமானம் மூலமும் அரசாங்கம் வருவாய் பெற்றது.19 குற்றவாளிக்கு அளிக்கப்பட்ட தண்டனைகளில் ஒன்று அபராதம் வசூலிப்பதாகும். இதுவும் அரசிற்கு வருமானம்தான் மராத்தியர் காலத்தில் சிறு சிறு குற்றங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டதால் ஏராளமான நிதி வசூலானது.

முடிவுரை

ஒவ்வொரு நீதிமன்றத்திலும் பல வகையான வழக்குகள் நடைபெற்றன. குற்றங்களுக்கேற்றவாறு குற்றவாளிகளுக்குத் தண்டனைகள் அளிக்கப்பட்டன.

1799இல் இரண்டாம் சரபோஜி தஞ்சையில் நீதிமன்றங்களை உண்டு பண்ணவும், சிவில், கிரிமினல் வழக்குகளை விசாரணை செய்யும் அதிகாரத்தையும் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கு விட்டுக் கொடுத்தார். இதனால் ஆங்கிலேயர்களின் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப் பெற்றன. 1801இல் ஆங்கிலப் பாராளுமன்றத்தால் ஏற்படுத்தப்பட்ட ஒரு சட்டத்தின்படிச் சென்னையில், 'சுப்ரீம் கோர்ட்' எனப்பட்ட தலைமை உயர்நீதிமன்றம்' ஏற்படுத்தப் பெற்றது. மராத்திய உயர் அதிகாரிகள் விசாரணைக்காக இந்த நீதிமன்றத்திற்குச் சென்றனர். 1855இல் இரண்டாம் சிவாஜி இறந்த பின் அவரது மனைவி காமாட்சிபாயி சென்னப் பட்டணம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்தார்.

1855இல் மராத்தியர் ஆட்சி தஞ்சையில் முடிவடைந்த போது நீதி மன்றங்களும். தண்டனை முறைகளும் மாற்றி அமைக்கப்பட்டன. ஆங்கிலேயர்களின் ஆட்சியின் புதிய முறையிலான சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன.

18 மோ.ஆ.கு. 1 -32

19

மேரி ஆ

15 23

226

காகிதச்சுவடி ஆய்வுகள்