உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சி. இலட்சுமணன்

அரிய கையெழுத்துச் சுவடித்துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்

இலண்டனிலுள்ள

இந்திய அலுவல் ஆவணங்கள்

பதினேழாம் நூற்றாண்டு இந்தியாவைப் படம் பிடித்துக் காட்டும் காலக் கண்ணாடியாகவும்: அந்நூற்றாண்டில் நிலவிய சமூகப் பொருளாதார அரசியல் நிலைகளைச் சித்திரிக்கும் சான்றுகளாகவும்: இந்திய வரலாற்றாய்விற்கும். புதிய வரலாற்று வரைவிற்கும் வளம் சேர்க்கும் முதன்மை ஆதாரங்களாகவும் விளங்குபவை இந்திய அலுவல் ஆவணங்களாகும். இவ் ஆவணங்களைப் பற்றி அறிமுகம் செய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

இந்திய அலுவல் ஆவணங்கள் - விளக்கம்

'இந்தியா' என்பது பிரிட்டீஸ் இந்தியாவையும். அலுவல் என்பது ஆங்கிலேயரின் ஆட்சி மற்றும் நிர்வாகச் செயன்முறைகளையும் குறிப்பதாகும். எனவே இந்திய அலுவல் ஆவணங்கள் என்பதற்குப் பிரிட்டீஸ் இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சி தொடர்பாக நிலவிய நிர்வாகச் செயன்முறைகள் பற்றிய ஆவணங்கள் என்று விளக்கம் தரலாம். இவ் ஆவணங்கள் இலண்டனிலுள்ள நூலகத்தில் உள்ளன. இந் நூலகம் இந்திய அலுவல் ஆவணங்களைக் கொண்ட நூலகம் (India Office Records Library) என்ற பெயரில் இயங்கி வருகிறது.

ஆவணங்களின் விளக்க அட்டவணை

இந்திய அலுவல் ஆவணங்களின் விளக்க அட்டவணையே (Catalogue of the Home Miscellaneous of the India Office Records) இக் கட்டுரைக்கு முதன்மை ஆதாரமாக அமைந்துள்ளது. சாமுவேல் சார்லஸ் ஹில் (Samuvel Charles Hill) என்பவரால் இவ் விளக்க அட்டவணையை உருவாக்கும் பணி தொடங்கப் பெற்று. அச்சாகிக் கொண்டிருக்கும் நிலையில் இவர் காலமாகிவிட்டதால் வில்லியம் ஃபோஸ்டர் (William Foster) என்பவரால் முடிக்கப் பெற்றது. பல்வகைப்பட்ட உள்நாட்டு விவகாரங்களைப் பற்றிய இந்திய அலுவல் ஆவணங்கள் என்னும் வரிசையில்: இலண்டனிலுள்ள இந்திய அலுவலகத்திற்காக: எழுதுபொருள் அலுவலகத்தால் 1927இல் வெளியிடப்பட்டுள்ளது.

இவ் அட்டவணையை உருவாக்கத் தொடங்கிய காலத்தில் 'உள்நாட்டு காகிதச்சுவடி ஆய்வுகள்

227