உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




விவகாரங்கள் பற்றிய வரிசை' என்று தொடங்கப்பட்டதென்றும் பின்னர் இத்திட்டத்திலிருந்து விலகிவிட்டமை குறித்தும் வில்லியம் ஃபோஸ்டர் தமது முன்னுரையில் பின்வருமாறு சுட்டுகின்றார்.

"பிரிட்டீஸ் இந்திய நிர்வாக ஆவணங்களின் பாதுகாப்பு அலுவலகத்தில் முதல் பதிவாளராகவும். ஆவணக் கண்காணிப்பாளராகவும் விளங்கிய டான்வெர்ஸ் 1884இல் நூல்கட்டுமானத் தொகுதிகளாகக் காணப்பட்ட ஆவணங்களை; ஆலைகள் தொடர்பான ஆவணங்களுடனும், கப்பல்கள் பற்றிய ஆவணங்களுடனும் ஒப்புநோக்கிய நிலையில் உள்நாட்டு விவகாரங்கள் பற்றிய பல்வகை ஆவணங்கள் என்னும் தலைப்பில் ஒழுங்குபடுத்தினார். பின்னர் உள்நாட்டு விவகாரங்கள் என்பது கைவிடப்பட்டு அனைத்து ஆவணங்களும் சேர்க்கப்பட்டன"

ஆனால் உள்நாட்டு விவகாரங்கள் பற்றிய பல்வகை ஆவணங்கள் (Home Miscellaneous Series) என்ற தலைப்பு மட்டும் மாற்றப்படவில்லை. இத்தலைப்பு முதல் 47 தொகுதிகளுக்கு மட்டும் பொருத்தமாகலாம் என்பது இவர்தம் கருத்தாகும். ஆவணங்களின் தொகுப்புப் பற்றிய தோற்றுவாய்

682 பக்கங்களைக் கொண்ட இச் சுவடி விளக்க அட்டவணை ஆங்கிலத்தில் அமைந்துள்ளது இவ் 1 அகராதி 146 பக்கங்களில் அமைந்துள்ளது. இந்திய அலுவலக ஆவணங்களின் உள்ளடக்கம் மற்றும் ஆவணங்களின் தொகுப்புப் பற்றிய விளக்கங்களை வில்லியம் ஃபோஸ்டர் தமது முன்னுரையில் குறிப்பிடுகின்றார்.

பேட்வுட் காகிதச் சுவடிகள் (Birdwood papers) கிழக்கிந்தியக் கம்பெனி சுவடி வரிசை (East Indies). வெல்லஸ்லி காகிதச் சுவடிகள் (Wellesley papers). ஜேம்ஸ் கம்மிங் மற்றும் தன்வேர்ஸ் தொகுப்புகள் (James Cumming and Danvers Collections). சார்ட்டர்ஸ் (Charters). பிரெஞ்சு இந்திய ஆவணங்கள் (French India Records), ஆலைகள் தொடர்பான ஆவணங்கள் (Factory records). ஃபிஸ்டர்ஸ் காகிதச் சுவடிகள் (Fisters papers) மற்றும் அரசியல் துறை ஆவணங்கள், பழமையான விளக்க அட்டவணைகள், அகராதி அட்டவணைகள், தனியார் அன்பளிப்புகள் ஆகியவை இந்திய அலுவல் ஆவணங்களாகத் திகழ்கின்றன.

பேட்வுட் காகிதச் சுவடிகள் என்பன ஜார்ஜ் பேட்வுட் (George Bird wood) என்பவரால் 17ஆம் நூற்றாண்டிலுள்ள ஆவணங்களைத் தொகுத்து வழங்கியதாகும். கிழக்கிந்தியக் கம்பெனி வரிசை என்பன (East Indies Series) 1748 முதல் 1784 வரையுள்ள இடைப்பட்ட காலத்தில் இந்திய விவகாரங்கள் தொடர்பாக மாநில அலுவலகங்களின் செயலாளரால் பெறப்பட்ட ஆவணங்களாகும். இவ் ஆவணங்களைப் பற்றிய விளக்கங்கள் 93 முதல் 190 வரையுள்ள தொகுதிகளில் தரப்பட்டுள்ளன. ஏறத்தாழ 100 ஆவணத் தொகுதிகள் கிழக்கிந்தியக் கம்பெனி தொடர்பாக அமைந்துள்ளமை நோக்கத்தக்கதாகும்.

228

வெல்லஸ்லி காகிதச் சுவடிகள் (Wellesley papers) என்பது சென்னை காகிதச்சுவடி ஆய்வுகள்