உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மும்பை முதலிய இடங்களிலுள்ள மாநில ஆளுநர்களிடமிருந்து பெறப்பெற்ற கடிதங்களின் மூல ஆவணங்களாகும். இத்தகைய ஆவணங்கள் தொகுதி 457 முதல் 479 வரை 22 தொகுதிகளில் அமைந்துள்ளன.

பிரிட்டீஸ் இந்திய ஆட்சிக் குழுவின் வருவாய் மற்றும் நீதித்துறைகளின் தலைவராகிய ஜேம்ஸ் கம்மிங் (James Cumming) பணியாற்றிய காலத்தில். நீதித்துறை இயக்குநர்களிடமிருந்து 4000 டாலருக்கு வாங்கப்பெற்றவை ஜேம்ஸ் சேகரிப்புகள் என அழைக்கப்படுகின்றன. மற்றுமொன்று தன்வேர்ஸ் (Danvers Collection) என்பவரால் தொகுக்கப்பெற்ற பதிவு செய்யப்படாத காகிதச் சுவடிகளின் தொகுப்பாகும். இவை விளக்க அட்டவணையில் 719, 720 ஆகிய தொகுதிகளில் அமைந்துள்ளன. இத் தொகுப்புகள் சார்ட்டர்ஸ் (Charters) பிரெஞ்சு இந்தியா (French India) ஆலைத் தொடர்பான ஆவணங்கள் (Factory Records) என்னும் தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கிழக்கிந்தியக் கம்பெனியினரின் சோதனைத் துறையினரால் (Examiner's Department in the East India) 1804இல் தொகுக்கப்பெற்ற ஆவணங்கள், விளக்க அட்டவணையில் 716ஆவது தொகுதியில் அமைந்துள்ளன. எஞ்சியவை ஃபிஸ்சர்ஸ் காகிதச் சுவடிகள் (Fisher's Papers) என அழைக்கப்படுகின்றன. இச் சுவடிகள் சோதனைத் துறையில் இப்பணிக்காக 1814இல் நியமனம் செய்யப்பெற்ற தாமஸ் ஃபிஸ்சர் ( Thomas Fisher) என்பவரால் தொகுக்கப்பட்டதாகும்.

இவைதவிர அரசியல் துறை மற்றும் பழைய விளக்க அட்டவணைகள், அகராதி அட்டவணைகள், தனியார் அன்பளிப்புகள் ஆகியவை எஞ்சிய தொகுப்புக்களாகக் காணப்படுகின்றன.

கிழக்கிந்தியக் கம்பெனி நடவடிக்கைகள்

இந்திய அலுவல் ஆவணங்களில் ஏறத்தாழ எட்டில் ஒருபகுதி கிழக்கிந்தியக் கம்பெனி நடவடிக்கைகள்பற்றிய ஆவணங்களாகத் திகழ்கின்றன. நூற்றுக்கணக்கான ஆய்வுகள் மேற்கொள்வதற்குரிய முதன்மை ஆதாரங்கள் இதன்கண் காணப்படுகின்றன. சான்றாகச் சிலவற்றைக் கீழே காணலாம்.

இந்தியாவிற்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நிகழ்ந்த சச்சரவுகள் மற்றும் போர் குறித்த நடவடிக்கைகள். டியூப்ளக்ஸ் (Duplex). கடீகன் (Godehen. முகம்மது அலி (Muhammad Ali). சாந்த சாகிப் (Chanda Sahib). முஜபர் ஜாங் (Mujafar Jang). நசீர் ஜாங் (Nasir Jang) ஆகியோர் நடவடிக்கைகளும் டெல்கி நிகழ்வுகளும் காணப்படுகின்றன. இங்கிலாந்து மகாராணிக்கு 1770இல் ஆர்காட் நவாபு எழுதிய கடிதங்கள், மராத்தியர்களுடன் கர்னல் உப்டன் (Upton) செய்து கொண்ட உடன்படிக்கை.3 1778இல் சந்திரநாகூர் ஒப்படைப்பு. பிரெஞ்சுப் போர்ச் சிப்பாய்களை அதிகரித்தல், கூக்ளி நதிப் பாதுகாப்பு. கர்னல் லெஸ்லி (Col. Leslie). நஜாப் அலி (Najab Ali) போன்றோர் படையெடுப்பு பற்றிய குறிப்புகள். 4

1.

Vol.

93: 3.

3.

Vol. 123 : 5.

2.

Vol. 103 7

4.

Vol. 143. 3.

காகிதச்சுவடி ஆய்வுகள்

229