உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஹேஷ்டிங்ஸ் (Hastings). அயர் கூட் (Eyre Coote). வீலர் (Wheler), பிரான்ஸிஸ் (Francis) போன்றோர் 1781இல் எழுதிய தீர்மானங்கள்.5 1782இல் சென்னையில் புயல் மற்றும் பஞ்சம், உணவு தானிய ஏற்றுமதித் தடை ஹைதர் அலி இறப்பு. திப்பு சுல்தான் போர். மராத்தியர் நிகழ்வுகள். சிட்னி பிரபுக்கு (டுடிசன ளுலனநேல) அனுப்பப்பட்ட கடிதங்கள் போன்ற பல ஆவணங்கள உள்ளன.

6

காலவரிசையில் இந்திய வரலாற்று நிகழ்ச்சிகள்

554ஆவது தொகுதியில் 1 முதல் 400 வரையுள்ள பக்கங்களில் அமைந்துள்ள ஆவணங்களில் 1773 சனவரி 30 முதல் 1798 அக்டோபர் 15 வரை இந்தியாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகள கடிதத் தொடர்புகளின் அடிப்படையில் காலவரிசையில் தரப்பட்டுள்ளன. 558ஆவது தொகுதியில் 1 முதல் 605 வரையுள்ள பக்கங்களில் அமைந்துள்ள இவ் ஆவணங்கள் 1782 முதல் 1790 வரை அதாவது மராத்தியப் போர் முடிவுற்றது முதற்கொண்டு பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் காட்டுகின்றன. இவற்றைச் சுவடி நிலையில் முதன்மை ஆதாரமாகக் கொண்டு முனைவர்ப் பட்ட ஆய்வுகள் மேற்கொள்வோர் பட்டங்கள் பெறுவதோடு வரலாற்றுலகிற்கும் பயனுள்ள பங்களிப்பினை நல்கிய பெருமைக்குரியவராகலாம். வங்காளப் புரட்சியும் இருட்டறைத் துயர நிகழ்ச்சியும்

1740இல் நவாப் பதவியேற்ற அலிவர் டி கான் 1756இல் காலமானார். இவருடைய பேரன் ஸிராஜ்-உத்-தௌலா (Siraj-ud-daula) இவருக்குப் பின் பதவிக்கு வந்தார் வில்லியம் கோட்டையின் அரணமைப்புகளை வலிமைப்படுத்தியதன் மூலம் பிரிட்டிஷார் இவரது கோபத்திற்கு ஆளாயினர். புதிய அரண்களை அழிக்குமாறு இவர் விடுத்த ஆணைக்கு அவர்கள் கீழ்ப்படியவில்லை. தப்பியோடிய ஒருவனைத் திரும்ப ஒப்படைக்க மறுத்ததன் மூலம் இவரது சினத்தை மேலும் அவர்கள் தூண்டினர். அனைத்திற்கும் மேலாகத் தமக்குத் தரப்பட்டிருந்த வாணிபச் சலுகைகளை ஆங்கிலேயர் தவறாகப் பயன்படுத்தத் தலைப்பட்டனர். 1756இல் காஸிம் பஜாரில் (Cassim bazar) இருந்த ஆங்கிலேயப் பண்டகசாலையை இவர் முற்றுகையிட்டதுடன் கல்கத்தாவையும் கைப்பற்றினார். கல்கத்தாவை இவரிடம் ஒப்படைப்பதற்கு முந்தைய நாளில் ஆங்கிலேய ஆளுநர் டிரேக் (Drake) மற்றும் பலரும் அங்கிருந்து தப்பியோடினர். எஞ்சியிருந்தவர்கள் ஹோல்பெல்லின் தலைமையில் தாக்குதலைச் சிறிது எதிர்த்து நின்றனர் அவர்களின் முயற்சி சிராஜ்-உத்-தௌலாவிடம் சிறைக்கைதிகள் ஆவதிலேயே முடிவடைந்தது. அவர்களில் 146 சிறைக் கைதிகளை 18 அடி சம் சதுரமான அறையில் நவாப் அடைத்து வைத்ததாகவும், புழுக்கமான இரவுப் பொழுது கழித்து 23 பேர்கள் மட்டுமே உயிரோடு இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இருட்டறைத் துயரநிகழ்ச்சி (Black hole tragedy) என்றழைக்கப்படுகின்ற இக் கொடூரமான நிகழ்ச்சியைப் பற்றிய ஆதாரம் புதிராகவே புதைந்து கிடக்கின்றது என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.?

மேற்குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வின் ஆதாரம் இந்திய அலுவல் ஆவணங்கள் 804ஆவது தொகுதியில் 443-505: 510-514: 546-554 ஆகிய

Vol. 153 12.

6 Vol 173 : 10.

7 டி எஸ் இராமலிங்கம் இந்திய வரலாறு டி எஸ் எஸ் ஆர் பப்ளிகேஷன்ஸ் மதுரை. 1974, ப. 190

230

காகிதச்சுவடி ஆய்வுகள்