உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பக்கங்களில் காணப்படுகின்றன. இவ்விவரங்களை சிராஜ்-உத்-தௌலாவுடன் நடந்த சண்டை. காஸிம் பஜார் மற்றும் கல்கத்தாவைக் கைப்பற்றிய நிகழ்ச்சி. மற்றும் இருட்டறைத் துயர நிகழ்ச்சி என்னும் தலைப்புகளில் சுவடி விளக்க அட்டவணை காட்டுகின்றது. வரலாற்றாசிரியர் குறிப்பிடுவது போலப் புதைந்து கிடக்கும் இவ் அரிய ஆதாரங்களை ஆராய்ந்து வரலாற்றுலகிற்கு அறிவிக்க வேண்டியது அறிஞர்கள் கடப்பாடாகும்.

மேற்குறிப்பிட்ட

நிகழ்ச்சிகளை விளக்குவதற்கு

முக்கியச்

சான்றாதாரங்களாக. 1756 சனவரி 3ஆம் தேதி சந்திர நாகூரிலிருந்து எழுதப்பட்ட பிரஞ்சுக் கடிதமும். 1756 அக்டோபர் 13ஆம் தேதி சென்னை நிர்வாகக் குழுவினர் இயக்குநர்களுக்கு எழுதிய கடிதங்களும் காணப்படுகின்றன என்பதை.

" (Vol. 804 : 27) pp. 443-505, 510-514, 546-554 papers concerning the quarrel with Siraj-ud-Daula his capture of Cossim bazar and Calcutta and the Black hole. (Note: especially the French evidence in a letter from Chandranagore dated 13th July 1756 on p. 553 and that in

the letter from the Madras council to the Directors dated 13th October 1756 on pp. 560-561"

எனச் சுவடி விளக்க அட்டவணை குறிப்பிடுகிறது.

B

இவற்றை மேலும் ஆராய்ந்துரைக்கின்ற நிலையில் இருட்டறைத் துயர நிகழ்ச்சியை உறுதிப்படுத்துவதோடு வேறு பல உண்மைகளும் வெளிவரக்கூடும். சிராஜ் - உத் - தௌலாவின் கொடுங்கோல் தன்மையை வரலாற்றுலகிற்கு அறிவிப்பதற்கு இவை தக்க சான்றுகளாய் விளங்குகின்றன என்பதும் எண்ணிப் பார்க்கத்தக்கதாகும்.

சதி (Sati)

கணவன் இறந்தவுடன் மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்ததென்பது வரலாற்றுச் செய்தியாகும். இவ் வரலாற்றுச் செய்தியை இக்காலத்தில் மறுத்துரைப்பாரும் உளர். உடன்கட்டை ஏறுதல் என்பது உண்மை நிகழ்ச்சிகள் அல்ல. கண்ணகி காலத்துப் பாண்டிய மன்னன் இறந்தவுடன் அவன் மனைவி கோப்பெருந்தேவி அவன்மேல் விழுந்து இறந்தாள் என்பது உடன்கட்டை ஏறுவதன்பால் நிகழ்ந்ததல்ல. கோப்பெருந்தேவி அந்நேரத்தில் மாரடைப்பால் இறந்தாள் என்பதே உண்மை. உடன்கட்டை ஏறுதல் என்பது புராண நிகழ்ச்சிகளேயன்றி வேறில்லை என்றெல்லாம் வாதிடுவோர்க்குச் சான்று பகரும்வண்ணம் சதி (Sati) பற்றிய பல ஆவணங்கள் 274, 540. 541 ஆகிய தொகுதிகளில் காணப்படுகின்றன என்பது இவண் குறிப்பிடத்தக்கதாகும். எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் காணலாம்

1822 மே 24இல் நிசாமட் அடல்ட் (Nizamat Adult) என்பவர் வங்காளத்தி

8. Catalogue, pp. 529-530.

காகிதச்சுவடி ஆய்வுகள்

231