உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




லுள்ள கீழ்மட்ட மற்றும் மேல்மட்ட மாகாணங்களில் நடைபெற்றுவரும் உடன்கட்டை ஏறுதல்பற்றிய அறிக்கையினை அளித்துள்ளார். அவ்வறிக்கையில் 1820ஆம் ஆண்டு 597 உடன்கட்டை ஏறுதல் நிகழ்ந்ததென்றும். 1821இல் 654 நிகழ்ந்ததென்றும் குறிப்பிடுகின்றார். உடன்கட்டை ஏறுதல்பற்றிய 1823இன் அறிக்கையின் அடிப்படையில் இவ்வழக்கத்தை ஒழிக்க வேண்டுமென்று வங்காள் அரசாங்கம் 1824 டிசம்பர் 3இல் ஒரு தீர்மானம் கொண்டு வந்தது.

10

சென்னை அரசாங்கத் தலைமைச் செயலாளரின் பிரதிநிதி வில்லியம் பிளாக்பார்ன் (William Blackbume) 1882 ஏப்ரல் 27இல் எழுதிய தமது அறிக்கையில். தஞ்சை மன்னர் அமர்சிங் இறப்புப்பற்றியும். அவர்தம் இரு மனைவியர் உடன்கட்டை ஏறிய நிகழ்ச்சிகளையும் குறிப்பிடுகின்றார்.

"William Black Burne Resident to chief secretary Madras Government 27th April 1802 death of Amirsingh Raj of Tanjore and death of by Sati two of his widows"11

அவ் இருவரையும் சாத்வீக முறையில் உடன்கட்டை ஏறவேண்டாமென்று பெண்கள் எல்லோரும் தடுத்ததையும் பொருட்படுத்தாமல் நெருங்கிய உறவினர்கள் கெஞ்சி மன்றாடிக் கேட்டுக் கொண்டதையும் பொருட்படுத்தாமல் அரசாங்க அதிகாரிகளின் அச்சுறுத்தல்களுக்கு இணங்காமல் தன்னிச்சையாக இருவரும் உடன்கட்டை ஏறினர் என்றும் நெருப்பால் ஏற்படும் வேதனையைப் போக்குவதற்கு எவ்வித மருந்துகளையும் பயன்படுத்தவில்லை யென்றும் தமது அறிக்கையில் வலியுறுத்திக் கூறுகின்றார்.

"In this case the sati was absolutely voluntary. The ladies resisting the entreaties of their nearest relations and also the threats of officials. Nor was any attempt made by drugs of any kind to render them insensible to the pain of the fire"12

விண்ணப்பங்கள், ஆணைகள், உடன்படிக்கைகள்

இந்திய அலுவலக ஆவணங்களில் விண்ணப்பங்கள். ஆணைகள். ஒப்பந்தங்கள் குறித்த ஆவணங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. தொகுதி 78இல் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றிய அலுவலர் பலருடைய விண்ணப்பங்கள் காணப்படுகின்றன அவற்றுள் ஒருசில வருமாறு:

9 Vol. 540. 1 (pp 1 - 189).

10 Vol 541. 3 (pp. 373 - 391)

11 Vol. 274 6 (pp 463 - 479) and see a letter to the editor of Vol. IV Misc. Tracts p 124 dated 16th October 1802

12 Ibid,

232

காகிதச்சுவடி ஆய்வுகள்