உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




611 பள்ளிக் குழந்தைகட்குத் தஞ்சை வட்டத்தில் 18 ஆசிரியர்கள் பாடம் கற்பித்துள்ளனர். இவர்கட்கும். தஞ்சையின் மையப் பள்ளியில் ஆசிரியப் பணியாற்றிய ஆங்கில ஆசிரியர் ஐவர். தமிழாசிரியர் எழுவர். பெண்கள் தையல் ஆசிரியை இருவர் இவர்கட்கும் சேர்த்துச் சம்பளத்துக்கு ஒவ்வொருமாதமும் செலவிடப்பட்ட தொகை ரூ 341, 08 அணா ஆகும். இப்பள்ளிகளில் சில சொந்தக் கட்டிடத்திலும். ஆலயத்திலும். வாடகை வீடுகளிலும் நடத்தப் பட்டுள்ளன. குறிப்பிட்டுள்ள சில ஊர்களை இப்போது கண்டு பிடிக்க இயலவில்லை. இதனைத் தொடர்ந்து தஞ்சை வட்ட அறிக்கையில் அவ்வாண்டு நிகழ்ந்த திருமணம். திருமுழுக்கு. திருவிருந்து போன்ற விவரங்களும் துல்லியமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

இடம்பெயர்ந்து சென்ற தஞ்சை மக்கள் வட்டம்

தஞ்சையின் மையத் திருப்பணி மூலம் சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு. பணி காரணமாக வேற்று ஊர்களில் தங்கியிருந்த மக்கள், உபாத்தியாயர், உபதேசியார்களது விவரங்களை இவ்வறிக்கை கூறுகிறது. இவ்வட்டம் தொடர்புடைய ஊர்களாவன: பாபநாசம், திருப்பலாய்த் துறையுடன் இரண்டு கிராமங்கள். காளபோகம் அதனுடன் ஐந்து குக்கிராமங்கள், கபித்தலம், தாராசுரம். கஞ்சனூர். தேரழுந்தூர், விட்டலூர். முளையூர், நாங்கூர், மணிகிராமம். சரபோசிராசபுரம். (80 மைல்) குமார மங்கலம் 75 மைல்) வதிஷ்டர்குடி, லெட்சுமாங்குடி மற்றும் கூத்தா நல்லூர் ஆகிய ஊர்களை விசுவாசம் என்ற தமிழ்ப் பாதிரியார் (Native Priest - நாட்டையர்) கண்காணித்து வந்துள்ளார். மேற்சொன்ன ஒவ்வொரு கிராமங்களிலும் உபதேசியார்களாகச் சத்தியநாதன். தவசியப்பன். பிச்சைமுத்து. தேவபிரசாதம். தாவீது. காபிரியேல், வரதப்பன், பரமானந்தம். வரதமுத்து. தேவநேசன், மதுரநாயகம் மற்றும் ஜவான் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இவ்வூர்களில் கள ஆய்வுகள் மேற்கொண்டால் பல செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மேற்சொன்ன ஊர்களில் ஆண்கள். பெண்கள், குழந்தைகள் சேர்த்து 1217 கிறித்தவர்கள் இருந்துள்ளனர். மேற்சொன்ன பல ஊர்களில் இன்று ஆலயமோ. பள்ளியோ இருந்ததற்கான அடிச் சுவடுகள் எதுவும் இல்லை. இவ்வட்டத்தில் 11 மிஷன் பள்ளிகள் இருந்துள்ளன

பள்ளிகள் விவரம்

ஊர்

பாபநாசம்

திருப்பலாய்த்துறை

புதுப்படையூர்

ஆசிரியர்

மதுரநாயகம்

நாராயணசாமி தைரியநாதன் சாந்தப்பன்

CH W W

ரூ

3

சம்பளம்

-

00

3

-

08

3.-

08

-

08

கஞ்சனூர்

தாவீது

விட்டலூர்

முளையூர்

மணிகிராமம்

சத்தியநாதன் தேவப்பிரசாதம் வேதநாயகம்

HDM

3

3 04

3 04

சரபோசிராசபுரம்

நாங்கூர்

குமார மங்கலம்

காகிதச்சுவடி ஆய்வுகள்

தேவசகாயம் தேவநேசம் தேவவியாசர்

HOMMM

3

08

3

08

3 - 08

3 - 08

3

08

323