உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தேரழந்தூர்

காபிரியேல்

3 - 08

இவ்வூர்களில் மொத்தம் 133 மாணாக்கர் கல்வி பயின்றுள்ளனர். ஆசிரியர்கட்கு ஊதியமாக ரூ 62. 12 அணா மொத்தமாகச் செலவிடப்பட்டுள்ளது.

இராசகிரி வட்டம்

திருச்சபை

இராசகிரியை மையமாகக் கொண்டு சுங்கான்திடல். அம்மன் பேட்டை, தண்டான் கோரை, வீரசிங்கம் பேட்டை, இராசகிரி, மாங்குடி. திருப்பூந்துருத்தி, பள்ளியேறி செங்கிப்பட்டி ஆகிய இடங்களில் சொந்தமாக இடம் வாங்கப்பட்டு ஆலயங்களும், பள்ளிகளும் இருந்துள்ளன. இவற்றில் இன்றும் அம்மன் பேட்டை. மாங்குடி, திருப்பூந்துருத்தி, பள்ளியேறி ஆகிய இடங்களில் ஆலயங்கள் உள்ளன. இந்த ஊர்கள் பாக்கியநாதன் என்ற தமிழ்ப் பாதிரியாரின் கண்காணிப்பில் இருந்துள்ளன. ஈசாக்கு. பரமானந்தம், பிச்சானந்தம். ஞானாதிக்கம், நல்லதம்பி. இராயப்பன் ஆகியோர் உபதேசிகளாகப் பணி செய்துள்ளனர். ஆண்கள். பெண்கள். சிறுவர் என 187 பேர் திருச்சபையில் இருந்துள்ளனர். 111 சிறுவர், சிறுமியர் பள்ளிகளில் கல்வி பயின்றுள்ளனர்.

இராசகிரி வட்டப் பள்ளிகள்

பள்ளி

ஆசிரியர்கள்

அம்மன்பேட்டை,

பிச்சைமுத்து

3

WG

1

ஊதியம் ரூ அ

8'

தண்டான் கோரை

பரமானந்தம்

3

12

இராசகிரி

சவரிமுத்து

3

8

மாங்குடி

நல்லதம்பி

வீரசிங்கம்பேட்டை

பிச்சானந்தம்

3

3

-

12

8

பள்ளியேறி

பாக்யநாதன்

1

செங்கிப்பட்டி

சவரி முத்து

4

3

-

8

40ரூபாய் 4 அணா அவர்கட்கு ஊதியமாக ஒவ்வொரு மாதமும் செலவிடப்பட்டுள்ளது.

கொள்ளிடம் வட்டம்

கொள்ளிடக் கரையில் இருக்கும் மேட்டுப்பட்டி விரகாலூர், புதுக்கோட்டை, குலமாணிக்கம், கோக்குடி பூண்டி கல்லகுடி ஆகிய ஊர்களில் பணியாற்றியுள்ளனர். இராசகிரி வட்டத்தைக் கண்காணித்த பாக்கியநாதன் பாதிரியாரே இதனையும் கவனித்துள்ளார். இவருடன் பணியாற்றிய உபதேசிகள் இன்னாசிமுத்து. சின்னப்பன். சின்னான். இராயப்பன், சவரிமுத்து மற்றும் முத்துசாமி என்பவர்கள். ஆண்கள். பெண்கள் சிறுவர் என 463 கிறித்தவர்கள் இருந்துள்ளனர். பள்ளியில் பயின்ற மாணாக்கர் 83 பேர்கள்.

324

காகிதச்சுவடி ஆய்வுகள்