உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கா.சத்தியபாமா விரிவுரையாளர்

குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி

தஞ்சாவூர்

மெக்கன்சியின் தமிழ்ச்சுவடிகளில்

குறும்பர்கள்

ஒரு நாட்டின் அல்லது மக்களின் வரலாற்றை விளக்கப் பல சான்றுகள் பயன்படுகின்றன. சிறப்பாகத் தமிழ் நாட்டு வரலாற்றிற்கு இலக்கியங்கள். கல்வெட்டுகள். நாணயங்கள். புதைபொருள்கள், கட்டடங்கள், கலைகள், வெளிநாட்டார் எழுதி வைத்த குறிப்புகள், செவிவழிச் செய்திகள் முன்னோர் காகிதங்களிலும், ஒலைச்சுவடிகளிலும் எழுதிச் சேகரித்து வைத்த குறிப்புகள் முதலானவை வரலாற்று மூலங்களாக உள்ளன. ஐரோப்பியரான காலின் மெக்கன்சி (கி.பி. 1796 - 1821) என்பார் சேகரித்து வைத்த காகிதச் சுவடிகளில் 'குறும்பர்' என்ற இனத்தாரின் வரலாறு குறித்த செய்திகள் காணப்படுகிகின்றன இவை இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர்ச் சேகரிக்கப்பட்ட ‘கைபீது' எனப்படும் செவிவழிச் செய்திகளாக அமைந்துள்ளன. மெக்கன்சியின் தமிழ்ச் சுவடிகளில் காணலாகும் இச்செவிவழிச் செய்திகளை இலக்கியச சான்றுகளோடும் வரலாற்று நூல்களில் கூறியுள்ள கருத்துக்களோடும் அரசு ஆவணங்களில் கூறியுள்ள செய்திகளோடும் இணைத்து ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

குறும்பர்கள்

தமிழக வரலாற்றின் இருண்ட காலத்தில் இன்னார். எங்கிருந்து வந்தவர் என்று அறிந்து கொள்ள இயலாத வகையில் குடியேறிய பல்வேறு இனத்தவர்களில் குறும்பர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். குறும்பர்களைப் பற்றிய செய்திகள் வரலாற்று ஆராய்சசியாளர்களுக்கு அரிதாகவே கிடைத்துள்ளன.

அபிதான சிந்தாமணியில் காணப்படும் குறும்பர் பற்றிய செய்திகள் வருமாறு. அபிதான சிந்தாமணி முற்காலத்தில் தொண்டை நாடு குறும்பர் வசப்பட்டிருந்தது இக்குறும்பர்களுக்கு 64 கோட்டைகள் இருந்தன. அவற்றிற்கு இராசதானி புழல் கோட்டை என்பதையும். இவர்கள் பல்லவ அரசர்களின் சந்ததியார் கோங்கர், சோழர், சாளுக்கியரால் தங்களிடங்களில் இருந்து துரத்தப்பட்டு மலை, காடு முதலிய இடங்களில் ஒளிந்து பலவித தொழில் செய்து பிழைக்கின்றனர். சிலர் வர்த்தகம் செய்கின்றனர். குறும்ப நாடு மலை நாட்டில் ஒரு பிரிவு இவர்களில் சிலர் கன்னடம் பேசுவர் என்ற தர்ஸ்டன் என்பாருடைய கருத்தையும் கூறுகின்றது.

24

காகிதச்சுவடி ஆய்வுகள்