உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அரசு ஆவணங்களில் குறும்பர்கள்

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் எடுக்கப்பட்ட பிரிட்டிஷாரின் ஆவணங்களில் குறும்பர் இனத்தவர் குறித்த செய்திகள் காணப்படுகின்றன. 1881 முதல் 1895 வரையிலான குறிப்பு நூல்களின்படிக் காணப்படும் செய்திகள் வருமாறு:

கி.பி. எட்டாம் நூற்றாண்டு வாக்கில் இந்த இன மக்களுக்கு ஏற்பட்ட ஒரு நெருக்கடி காரணமாக இவர்கள் தமிழகத்தின் தென் பகுதியில் பல்வேறு இடங்களுக்குப் பிரிந்து சென்றார்கள். இவர்களின் மூதாதையர் இன்றும் நீலகிரி போன்ற மலைப் பகுதிகளில் நாகரீகம் அற்ற முறையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் 'கூரி' என்று சொல்லக்கூடிய குறும்பை ஆட்டினை வளர்த்து வரக் கூடியவர்கள். இன்றும் இத்தகைய இனத்தவர் ஆடு வளர்த்து வருகின்றனர். இந்த இனத்தைச் சேர்ந்த கோயில் பூசாரிகளின் தலையில் தேங்காய் உடைக்கும் பழக்கம் இன்றும்கூடத் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வருகிறது.

வரலாற்று நூல்களில் குறும்பர்கள்

தமிழக வரலாற்றை விரிவாகக் கூறும் வரலாற்று நூல்களில் குறும்பர்கள் பற்றிய செய்திகள் மிகவும் குறைவாகவே கிடைக்கின்றன.

"மோரிய மன்னன் அசோகனின் குடிமக்களுள் புலிந்தர் என்றோர் இனத்தவரும் இருந்தனரென அப்பேரரசனின் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. அக்காலத்தில் தொண்டை மண்டலத்தில் 'குறும்பர்' என்ற ஓர் இனத்தினர் வாழ்ந்து வந்தனர் இவர்களே புலிந்தர்கள் போலும்”

என்கிறார் கே. கே. பிள்ளை. மேலும்

'ஆராய்ச்சியாளராகிய எலியட். செவேல் முதலியோர் தொண்டை மண்டலத்துப் பழங்குடியினரான குறும்பர் மரபினரே பிற்காலப் பல்லவர் என்று முடிவு செய்தனர். குறும்பர் ஆடு. மாடுகளை மேய்ப்பவர். இதனைக் கருத்தில் கொண்டு பால் அவர் (பால் கறப்பவர் -குறும்பர்) என்பதே பல்லவர் எனத் திரிந்திருக்கலாம் என முடிவு செய்தவரும் சிலராவர்"

என்கிறார். இவற்றைத் தவிரத் 'தென்னிந்திய வரலாறு' நூல் குறும்பர்களைப் பற்றிக் கூறுகிறது.

'கிருஷ்ணதேவராயரின் (கி. பி. 1509

--

1530) மருமகனும்

விஜயநகர அரசுப் பிரதிநிதியுமான இராமராயர் என்பார் விஜயபுரி சுல்தானுடன் நடந்த தலைக்கோட்டைப் போரில் (கி. பி. 1565) மாண்டார். மன்னரான திருமலைராயர் போர் நடத்த இயலாததால் அரண்மனையில் இருந்த செல்வங்களைச் சேகரித்துக் கொண்டு திருப்பதியை நோக்கிப் பயணமானார். விஜய நகரத்துப் படைகள் தோல்வியுற்றதைக் கேள்வியுற்ற காகிதச்சுவடி ஆய்வுகள்

25