உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிரிஞ்சாரிகள், இயம்பாடிகள், குறும்பர் முதலிய கொள்ளைக் கூட்டத்தினர் நகரில் புகுந்து கொள்ளையடிக்கத் துணிந்தனர்

செப்பேட்டில் குறும்பர்கள்

வேள்விக்குடிச் செப்பேட்டில் குறும்பர்கள் குறித்த செய்திகள் உள்ளன இலண்டன் பிரிட்டிஷ் பொருட்காட்சி சாலையில் உள்ள வேள்விக்குடிச் செப்பேடு பாண்டியனான நெடுஞ்சடையன் பராந்தகனின் பழமை வாய்ந்த செப்பேடாகும்.

ஆய்வேளையும் குறும்பரையும் நெடுஞ்சடையன் பராந்தகன் போரில் வென்றான் என்பதையும், "ஆய்வேளையும் குறும்பரையு மடலமரு எழித்தோட்டிக் காட்டுக் குறும்பு சென்றடைய நாட்டுக் குறும்பிற் செருவென்றும்" செப்பேட்டு வரிகள் 94 - 95) குறும்பு நாட்டுக் குறும்பர்களை வலிமை குன்றச் செய்தான் என்பதையும் வேள்விக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன. இப்போர் இவனது மூன்றாம் ஆட்சி ஆண்டிற்கு முன்னர் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது அச்செப்பேடுகளில் அறியக் கிடக்கின்றன. ஆகவே கி பி. 767ஆம் ஆண்டிலாவது அதற்கு முன்னராவது நிகழ்ந்திருத்தல் வேண்டும்.

என்கிறார் சதாசிவ பண்டாரத்தார்.

இச்செய்திகளால் பேரரசர்களை எதிர்க்கும் வலிமை உடையவர்களாகக் குறும்பர்கள் விளங்கியுள்ளனர் என்றும் சிற்றரசர்களாக இருந்துள்ளனர் என்பதையும் காட்டுக் குறும்பர். நாட்டுக் குறும்பர் என்ற இரு இனத்தவர் இருந்துள்ளனர் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

இலக்கியங்களில் குறும்பர்கள்

சங்க இலக்கியங்களில் குறும்பர்கள் குறித்த செய்திகள் காணப்படுகின்றன. அகநானூற்றில்.

"மறங்கெழு தானைக் கொறறக குறும்பியன்

செருமயல் நல்மான் தீதியறகு உரைத்து

என்று. அன்னி மிஞிலி என்பவன், வீரம் பொருந்திய படையை, உடையவனான வெற்றியுடைய குறும்பனான போர்த்திறம் மிக்க குதிரையை உடைய திதியன் என்பவனுக்குச் சொல்லி சினம் ஒழிந்தான் என்பதைப் பாடியுள்ளார் பரணர்.

பிற இலக்கியங்களில் அரிதாகக் குறும்பரைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன அவை சேக்கிழார் பெருமானின் பெரியபுராணம். திருத்தக்கதேவரின் சீவக சிந்தாமணி, கொங்குவேளிரின் பெருங்கதை ஆகியவையாகும். இம்மூன்று இலக்கியங்களில் சேக்கிழாரின் பெரியபுராணத்தில் சற்று விரிவான நிலையில் செய்திகள் கிடைக்கின்றன.

26

காகிதச்சுவடி ஆய்வுகள்