உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிவனடியார்களான 63 நாயன்மார்களில் பெருமிழலைக் குறும்ப நாயனாரும் ஒருவர். குறும்பர் மரபில் தோன்றியவர். இயற்பெயர் தெரியவில்லை. மிழலை என்ற நாட்டில் பெருமிழலை' என்ற ஊரில் தோன்றியவர். எனவே பெருமிழலைக் குறும்ப நாயனார் என்று அழைக்கப்பட்டார். பெருமிழலை நகரில் குறுநில மன்னராக விளங்கிய இவர், சுந்தரரின் பண்புகளை அறிந்து அவரை உடலாலும் உள்ளத்தாலும் வழிபட்டார். "அவர் கயிலாயம் செல்வதற்கு முன்னம் நான் இறப்பேன்" என்று தம் யோகவன்மையால் சுந்தரர் கயிலாயம் அடைவதற்கு முன்னால் கயிலாயம் அடைந்தார்.

வேத நிதி மிழலைக் குறும்பர்

"நீறு மிழலைக் குறும்பனார்"

(பாடல் எண்:1705)

(UNL60 GT600T: 1713)

எனவும் போற்றப்படும் இக்குறும்பர் சிற்றரசனாக விளங்கியமையை. பெரியபுராணத்தின்,

விளங்கும் தொன்மையது மிழலை நாட்டுப் பெருமிழலை"

அன்ன தொண்மைத் திருப்பதிக்கண் அதிபர் மிழலைக்

குறும்பனார்

என்னும் பாடலடிகளால் உணரலாம்.

(1706)

(1707)

பெருமிழலைக் குறும்ப நாயனார் சுந்தரரின் சமகாலத்தவர் என்பதை அவருடைய வரலாற்றின் மூலமாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. சுந்தரர் கி. பி. 7ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர். ஆதலால் பெருமிழலைக் குறும்ப நாயனாரின் காலமும் அதுவேயாகும் எனக் கருதலாம். இதனால் 7ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 8ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் குறும்பர்கள் சிற்றரசர்களாக வாழ்ந்து இருப்பதை அறிகின்றோம். சீவக சிந்தாமணியில்.

"ஈண்டமிழ் குட்டம்போல் வெரியெழத் திருகுநோக்கிக்

கோண்டரு குறும்பர் வெம்போர் கோக்குழாம் வென்ற துள்ளி

பாடல் எண் : 1079

என்று குறும்பர்களோடு கட்டியங்காரன் போர் புரிந்த செய்தி கூறப்பட்டுள்ளது.

"குறுநில மன்னர் குறும்பருங் குழீஇய" என்றும் "குன்றச் சாரற் குறும்பர்" என்றும் பெருங்கதை குறும்பர்களைக் கூறுகின்றது. இவையன்றி, சிலப்பதிகாரத்தின் உரையாசிரியர்களுள் ஒருவரான நச்சினார்க்கினியர், சிலப்பதிகார வேனில் காதையில்,

என்பதற்கு,

"நெடியோன் குன்றமுந் தொடியோன் பௌவமும் தமிழ்வரம் பறுத்த தண்புன னன்னாட்டு"

..... ஏழ்தெங்க நாடும் ஏழ்மதுரை நாடும் ஏழ் முன்பாலை நாடும் ஏழ்பின்பாலை நாடும் ஏழ்குன்ற நாடும் ஏழ்குண காரை நாடும்

காகிதச்சுவடி ஆய்வுகள்

27