உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஏழ்குறும்பனை நாடுமென்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும்"

என்று உரையில் கூறுகின்றார். 'ஏழ்குறும்பனை நாடு' குறும்பர்கள் வாழ்ந்த ஏழு நாடுகளாக இருக்கக்கூடும் என்றும் கருதலாம்.

இவற்றால் 7.8 நூற்றாண்டுகளில் குறும்பர்கள் சிற்றரசர்களாக விளங்கியுள்ள நிலை புலனாகிறது. இன்று தமிழகத்தில் வாழும் பழங்குடியினரில் ஒரு இனத்தவராக விளங்குகின்றனர். வட ஆற்காடு. கோயம்புத்தூர், நீலகிரி, திருச்சி மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர் இக்குறும்ப இனத்தவருள் இன்று பெட்ட குறும்பர், முள்ளு குறும்பர். சேனு குறும்பர் அல்லது தேனு குறும்பர். ஊராளிக் குறும்பர். ஆலு குறும்பர் அல்லது பால் குறும்பர் பிரிவினர் உள்ளனர். இவர்கள் அனைவரும் திராவிட மொழியைத் தங்கள் தாய் மொழியாகப் பேசி வருகின்றனர்.

மெக்கன்சியின் காகிதச் சுவடிகளில் குறும்பர்கள்

மெக்கன்சியின் நாற்பதுக்கும் மேற்பட்ட சுவடிகளில் குறும்பரைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. இவற்றில் குறும்பரின் தோற்றம். பெயர்க்காரணம். ஆட்சிமுறை. கோட்டைகள். பழக்க வழக்கங்கள், சமயம், தொழில்கள், பழக்கவழக்கங்கள் அழிவு முதலான பல செய்திகள் கூறப்பட்டுள்ளன.

என்றும்.

குறும்பர்கள் என்பது குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

என

"குறும்பர்கள் இனத்தவர் கர்னாடக தேசத்தை ஒத்த நாடுகளில் பெருகி. கர்னாடக தேசத்தை அடுத்துள்ள பகுதிகளுக்கும் பரவினார்கள். இவர்கள் 'கடோரம்' அல்லது 'குறும்பு' அமைத்து வாழ்ந்ததால் குறும்பர் என்ற பெயர் ஏற்பட்டது என்றும், சில சுவடிகளில் "முன்னொரு காலத்தில் தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த குறும்பாடுகளை மேய்ப்பதை முக்கியத் தொழிலாகக் கொண்டிருந்ததால் குறும்பர் எனப்பட்டார்கள்"

"இக்குறும்பர்கள் யாதவ வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால் குறும்பிடையார்"

என்றும் சொல்லப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

குறும்பரின் தமிழக வருகை

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர்க் கர்நாடக தேசத்தில் இருந்து காட்டு இனத்தவர் தமிழகத்திற்கு வந்து தொண்டை மண்டலத்தில் பரவினார்கள். முதன் முதலில் இவர்கள் உத்திரமேரூருக்கடுத்த காலப்பாக்கத்தில் வந்து குடியேறினார்கள். தொடக்கத்தில் இவர்களுக்குத் தலைவன் என்று யாருமின்றி. தன்னிச்சையாய் வாழ்ந்தார்கள் பின்னர்க் 'கமண்டபிரபு என்பவன் முதல் மன்னனானான். இவன்தன் ஆட்சிக்கு உட்பட்ட இடத்திற்குக் ‘குறும்பபூமி' என்று பெயரிட்டான். இப்பெயரே காகிதச்சுவடி ஆய்வுகள்

28