உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆதொண்டைச் சக்கரவர்த்தி தொண்டை மண்டலத்தைப் போரிட்டுக் கைப்பற்றும் வரை நிலைத்து விளங்கியது. இவன் 'புழலூர்' என்ற இடத்தில் பெரிய கோட்டை ஒன்றைக் கட்டினான்.

குறும்பர்கள் ஆட்சி செய்த பகுதிகள்

குறும்பர்கள் தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஆட்சி செய்துள்ளனர் என்பது சுவடிகளின் மூலமாகத் தெரிகிறது.

1. ஆதொண்டைச் சக்கரவர்த்தி காலத்தில் குறும்பர்களின் ஆளுகைக்குள்ளாக காஞ்சிபுரம். சென்னப்பட்டினம். மகாபலிபுரம் முதலான ஊர்கள் இருந்தன 2. காவேரிப்பாக்கம் தாலுக்கா குடியமல்லூர் ஊரை முன்னர் குறும்பர் ஆட்சி செய்தனர். அவ்வூருக்கு 'குறும்பசேரி' 'பாடலீவனம்' என்ற பெயர்கள் வழங்கப்பட்டிருந்தன.

3. ஆதியில் ஆற்காடு தாலுக்காவில் தாமரைப் பாக்கம். சித்தேரி. பொன்பத்திக் கிராமம் ஆகிய இடங்களில் குறும்பர்கள் கோட்டைகளைக் கட்டி ஆண்டு வந்தனர்.

4. திருவிடைச் சுரத்தில் குறும்பப் பிரபுக்கள் ஆட்சி செய்து வந்தார்கள் இராயர் அப்பாச்சியரது நாளையில் நெருவப்பாளையத்தை குறும்பர் ஆட்சி செய்தனர்.

5. இராயர் சமஸ்தானத்தில் குறும்பர் நெடுமரம். அணைக்கட்டு. காலப்பாக்கம். நெறும்பூர் என்ற இடங்களிலும் இன்றும் பல இடங்களிலும் கோட்டைகள் கட்டிப் புகழோடு விளங்கினார்கள்.

6. குறும்பநாடு விக்கிரம சோழ மண்டலம் என்ற பெயருடன் விளங்கியது. மருதங்குறும்பர் கோட்டை குறும்பரால் நீண்ட காலம் ஆளப்பட்டு வந்தது.

குறும்பரின் கோட்டைகள்

குறும்பர்கள் வரலாற்றில் 2 வகையான கோட்டைகள் குறிப்பிடப்படுகின்றன.

1. ஆட்சி செய்ய அமைத்த கோட்டைகள்

2. வியாபாரக் கோட்டைகள்

1.ஆட்சி செய்ய அமைத்த கோட்டைகள்

குறும்பர்களின் முதல் மன்னனான கமண்ட பிரபு குறும்பர்களின் எண்ணிக்கை அதிகமானதாலும், பிற சாதியர் கலகம் செய்யத் தொடங்கியதாலும் குறும்ப பூமியை 24 பகுதிகளாகப் பிரித்து 24 கோட்டைகளைக் கட்டினான். இந்தக் கோட்டைகளின் கதவுகள் வெண்கலத்தாலும் தூண்கள் எருக்க மரத்தினாலும் ஆனவை. முதன் முதலில் குறும்ப மன்னன் புழல் கோட்டையைக் கட்டியதால் இதுவே பழமையான குறும்பர் கோட்டையாகும்.

1. இந்தக் குறும்பர்களின் கோட்டைகள் 64. இவற்றில் புகழ்பெற்றவை 24. புழல் காகிதச்சுவடி ஆய்வுகள்

29