உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சாலப்பாக்கம், நெறும்பூர். அணைக்கட்டு. பட்டிப்புலம். ஆமூர், புலியூர். களத்தூர். செம்பூர், தமனூர். ஈக்காடு முதலான இடங்களில் கோட்டைகளைக் கட்டினார்கள். இக்கோட்டைகளுக்கெல்லாம் புழல் கோட்டை இராசதானி 2. சத்தவேடு. ஊற்றக்கோட்டை, நாகலாபுரம். நிண்ணையூர், நாரணவனம். செப்பேடு. காளஹஸ்திக்கு அருகில் தொண்டை நாட்டுப் பகுதி. வேளுர் ஆகிய இடங்களில் குறும்பர் கோட்டைகள் இருந்தன.

3. குறும்பர். நெடுமரம். அணைக்கட்டு. காலப்பாக்கம். நெறும்பூர் ஆகிய இடங்களிலும் இன்னும் பல இடங்களிலும் கோட்டைகள் கட்டிக்கொண்டு பிரபலமாய் விளங்கினார்கள்.

30

4. கும்மிடிப் பூண்டியில் ஒரு குறும்பர் கோட்டை இருக்கிறது.

5. மருதங்குறும்பர் கோட்டை மண்ணால் ஆனது. இந்தக் கோட்டை குறும்பரால் நீண்ட நாட்கள் ஆளப்பட்டு வந்தது. கிருஷ்ணராயர் நாளில் செங்கல்பட்டு ராசாவான திம்மராசா திருப்புலிவனத்தில் எதிர் கோட்டை ஒன்றைக் கட்டிக் குறும்பருடன் போர் செய்தார். இறுதியில் குறும்பரை வென்று கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டார். அந்த மருதங்கோட்டையைத் தன் நெருங்கிய உறவினராகிய கோவிந்தராஜா என்பவருக்குக் கொடுத்தார். இவருக்குப் பின் இந்தக் கோட்டை பிராமணர்களுக்கு உதவியாக அக்கிரகாரமாக்கப்பட்டு வெங்களம்மாவின் பெயரால் வெங்களம்மாபுரம் என்று அழைக்கப்படுகிறது. 6. தாமரைப்பாக்கம், சித்தேரி. பொன்பத்தி கிராமங்களில் குறும்பர்கள் கட்டிவைத்திருந்த மண்கோட்டைகளை குலோத்துங்கச் சோழன் செப்பம் செய்து ஆட்சி செய்தான். அதன் பிறகு வீர சம்புவராயர் நாளையில் இந்தக் கோட்டையில் சில காலம் ஆட்சி செய்தார்.

7. பொன்னேரி குறும்பர் கோட்டை ஐந்து அல்லது ஆறுகாணி பரப்பளவு கொண்டது. அதில் முக்கால் பகுதியை அகத்தீசுவரன் கோயில் தர்ம விசாரணை செய்கின்ற ஆறுமுக முதலி என்பவர் தன் தோட்டமாக்கிக் கொண்டார் அந்தக் குறும்பர் கோட்டையில் இரண்டு வருடங்களுக்கு முன்னால் தோட்டம் போடுவதற்காகக் கொத்திச் சமனரக்குகின்ற போது அந்தக் கோட்டைக்குள்ளே பத்துப் பன்னிரண்டு தொட்டிகள் கிடைத்தன. ஆனால் அவற்றில் குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை. மேலும் இக்கோட்டையில் வெள்ளைக் கருங்கல்லினாலான முன்னூறு முன்னூற்றைம்பது குண்டுகள் கிடைத்தன. அந்த ஊர்மக்கள் சிலர் அவற்றைக் காத்து வருகிறார்கள். மழை பெய்து ஆற்றில் வெள்ளம் வரும்போது கோட்டையில் பகுதிகள் அரிக்கப்படும் போது செம்புகாசும். பொன் பணமும் அவ்வப்பொழுது கிடைக்கின்றது.

8. கும்மிடிப்பூண்டி, அதைச் சுற்றி இருந்த ஊர்களில் இருந்த குறும்பர் கோட்டைகளில் சில தொண்டைமானால் அழிக்கப்பட்டன. சில இசுலாமியரால் அழிக்கப்பட்டன. சில ஆனைகொந்தி ராயர்களால் அழிக்கப்பட்டன. திருமுல்லை வாயிலில் குறும்பர் கோட்டையை நிரவி சிவன் கோயில் கட்டப்பட்டது. மேலும் கும்மிடிப் பூண்டிக்கு அருகில் உள்ள கோட்டையின் சுவர் பெரிய கற்களால் கட்டப்பட்டிருந்தது. சாதியடி ஐந்து காகிதச்சுவடி ஆய்வுகள்