உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அல்லது ஆறடி அகலமும் பத்துப் பன்னிரண்டு அடி உயரமும் உள்ளவை அந்தக்கற்கள். அது போன்ற செங்கற்களை அங்கே இருப்பவர்கள் கொண்டு சென்று விட்டார்கள். மேலும் சித்தூர் கலெக்டர் துரை அந்தக் கோட்டைக்கு மேற்குப் பகுதியில் சாவடி ஒன்றைக் கட்டுவதற்காக. அந்தக் கோட்டையில் இருந்து செங்கற்களை எடுத்து வந்தார் என்பர்.

இவையன்றி 24 கோட்டங்களைக் குறித்த செய்தி ஒரு சாவடியில் காணப்படுகின்றது. அவற்றுள் சில கோட்டங்களில் பெயர்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன. அவை புழலூர். களத்தூர். செம்பூர். புலியூர். ஆமூர், வெண்குன்றம் மற்றும் காட்டுக்கோட்டமாகும். அக்கோட்டங்களில் கோட்டைகள் கட்டினார்கள் குறும்பர்கள் என்பது இங்கு எண்ணத்தக்கது.

2. வியாபாரக் கோட்டைகள்

குறும்பர்கள் காவேரிப்பட்டினத்துச் செட்டிகள் மூலமாகக் கப்பல் வாயிலாகப் பிற நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டார்கள். ஆகையால் பட்டிப்புலம், சாலக்குப்பம். சாலப்பாக்கம். மெய்யூர். ஆலம்பரை, மரக்காணம் முதலிய நகரங்களில் வியாபாரக் கோட்டைகள் கட்டினார்கள்.

இவற்றால் புழல், சத்தவேடு. ஊற்றுக்கோட்டை, நாகலாபுரம், நின்னையூர். செம்பேடு. காளஹஸ்திக்கு அருகில், வேளூர். நெடுமரம். அணைக்கட்டு. சாலப்பாக்கம். நெரும்பூர். கும்மிடிப்பூண்டி. தாமரைப்பாக்கம், சித்தேசி. பொன்பத்திக்கிராமம். பொன்னேரி, களத்தூர். செம்பூர். புலியூர். ஆமூர், வெண்குன்றம். காட்டுக் கோட்டம் ஆகிய இடங்களில் கோட்டைகள் இருந்ததையும் பட்டிப்புலம். சாலக்குப்பம். மெய்யூர். ஆலம்பரை. மரக்காணம் ஆகிய இடங்களில் வியாபாரக் கோட்டைகள் அமைத்து வாழ்ந்துள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது.

குறும்பர் - சமயம்

தொடக்க காலத்தில் இவர்கள் எந்தச் சமயத்தையும் சாராமல் இருந்தார்கள். ஒரு சன்யாசி இவர்களைச் சமண சமயத்தவர்களாக்கினார். அந்தச் சன்யாசியின் பெயரால் புழல் குறும்ப ராசாவுக்காகக் கட்டப்பட்ட சைனபஸ்தி இன்றும் இருக்கிறது என்பதை ஒரு சுவடியால் உணர்ந்து கொள்ள முடிகிறது. (தொண்டை மண்டல வரலாறு சு.எண் டி.3102)

1.நெறும்பூரில் ஏழு குறும்பத்தலைவர்கள் இருந்தார்கள். அவ்வேழு குறும்பத்தலைவரும் அருகக் கடவுளை வழிபடுவர். அச்சைன கடவுளின் சிலை வடக்குக் கோட்டைக்கு அருகில் உள்ளது.

2. ஆதொண்டைச் சக்கரவர்த்தி நாளில் குறும்பர்கள் சைன சமயத்திற்கு உட்பட்டிருந்தார்கள். இச்செய்தி பல சுவடிகளில் கூறப்பட்டுள்ளது.

3. பொன்னேரி குறும்பர் கோட்டையில் வீரபத்திர சுவாமி கோவில் ஒன்று. துர்க்கை கோயில் ஒன்று என இரண்டு கோவில்கள் இருந்தன. அந்தத் துர்க்கைக் கோயில் தோட்டத்திற்குள் அமைந்ததால் அதைப் பிரித்துப் போட்டார்கள். வீரபத்திரசுவாமி கோயில் தோட்டத்திற்கு வெளியில்

காகிதச்சுவடி ஆய்வுகள்

31