உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இருந்ததால் அதை அப்படியே விட்டு விட்டார்கள்.

குறும்பர்கள் 'வீரா' என்னும் தெய்வத்தையே வணங்குகின்றனர். இத்தெய்வம் 'வீராலு' என்றும் 'வீரபத்திரன்' என்றும் அழைக்கப்படுகிறது.

இச்சுவடி திருவண்ணாமலை துக்குடியைச் சேர்ந்த சோவாசிப்பாடியில் சின்ன முக்குறும்பக் கவுண்டன் சொன்னபடி திம்மண்ணைக் குறும்பக் கவுண்டன் எழுத மெக்கன்சி சேகரித்ததாகும். ஆகவே இது இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் குறும்பர்களின் தொழில். பழக்க வழங்கங்களைப் பற்றிக் கூறும் ஆதாரப்பூர்வமான ஆவணமாகும்.

இவற்றால் சமயம் என்று இல்லாமல் தொடக்க காலத்தில் வாழ்ந்த குறும்பர்கள் சமண சமயத்தினரால் வாழ்ந்து, காலப்போக்கில் சைவ சமயத்தினராக மாறியுள்ளார்கள் என்பதை அறியலாம்.

குறும்பர் - தொழில்

குறும்பர்களின் தொழில் குறும்பாடு மேய்ப்பதாகும். அந்தக் குறும்பாட்டு மயிரைக் கொண்டு கம்பளி நெய்து விற்பர். இவர்கள் சாதிக் குறும்பர்கள்' எனப்படுவார்கள். 'அண்டைக் குறும்பர்' என்றும் 'சுண்ணாம்பு குறும்பர் என்றும் 'வேடக் குறும்பர் என்றும் பலவிதக் குறும்ப சாதியினர் உள்ளனர் குறும்பர்" என்று சொல்லப்படுபவர்கள் நாட்டை ஆள்வது அல்லது பணிசெய்பவர்கள். *கண்ணாம்புக் குறும்பர்' என்பவர்கள் சுண்ணாம்பு சுட்டு விற்று வாழ்பவர்கள். வேடக் குறும்பர்கள் வேட்டையாடி வாழ்பவர்கள்

குறும்ப ஆண்கள் குடும்பத்தைக் கவனித்தல், பெண்கள் குறும்பாட்டில் மயிர் அறுத்துக் கம்பளம் நெய்தல் ஆகிய செயல்களை மேற்கொண்டனர். இறப்புச் சடங்கு

முற்காலத்தில் வாழ்ந்த தளர்ந்து வருகின்ற மனிதர்களை அவர்களை இறக்கும் வரையில் வைத்திருக்காமல் இறக்கும் தறுவாயில் இருக்கும்போது. பெரிய பானைகளில் அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை வைத்துப் புதைப்பார்கள். அவர்கள் அதிலே இருந்து அவதிப்பட்டு இறுதியில் மரணம் அடைவார்கள். இப்பானைகளை முதுமக்கள் தாழி என்பர். இவற்றை முதுமக்கள் சாடி என்றும் வழங்குவர். இத்தாழிகள் மண்ணால் செய்யப்பட்டுத் தீயில் சுடப்பட்டு இருக்கும். இதன் அடிப்பாகம் குறுகலாகவும் வாய்ப்பகுதி அகன்றும் இருக்கும். தமிழகத்தின் பல பகுதிகளில் அகழ்வாராய்ச்சிகள் மூலமாக இத்தகைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

32

குறும்பச் சிற்றரசர்கள் தாழிகளில் அடக்கம் செய்யப்பட்டனர்.

"இங்கு சிறிது காலத்திற்கு முன்பு பெரிய பானைகள் இருந்தன. அவை 'மதமதக்கா கால்கள்' என்று அழைக்கப்பட்டன. அவை குறும்பர் கோட்டைக்கு அருகில் இருந்தன. அவை குறும்ப பிரபுக்களுடைய சமாதிகளாகும். அவை சிறிது காலத்திற்கு

காகிதச்சுவடி ஆய்வுகள்