உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்பு கடலில் தள்ளப்பட்டன"

என்று கூறப்பட்டுள்ள (பட்டிப் புலக் கிராம கைபீது) செய்தியால் அறிந்து கொள்ளலாம்.

முன்னாளில் குறும்பர் இறந்து போனால் தொட்டிகளில் போட்டுப் புதைப்பது வழக்கம் என்பதும், இறப்பு நடந்த அன்று நெருங்கிய உறவினர்கள் ஏக சவரம் செய்து கொண்டு சவத்துடன் வருவார்கள். ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துத் துக்கம் விசாரிப்பர் என்ற செய்திகள் அறியக் கிடைக்கின்றன.

குறும்பர்களின் அழிவு

தொடக்க காலத்தில் தாமரைப்பாக்கம், சித்தேரி, பொன்பத்தி கிராமம் ஆகிய இடங்களில் குறும்பர்கள் கோட்டைகளைக் கட்டிக் கொண்டு ஆட்சி செய்து வந்தார்கள். அவர்கள் மனம் போன போக்கில் கொடுமைகள் செய்ததால் சோழன் குலோத்துங்கன் குறும்பர்மீது போர் தொடுத்தான். போரில் வெற்றி பெற்று அந்த இடத்திற்குச் 'செயங்கொண்ட சோழமண்டலம்' என்று பெயரிட்டான் காவேரிப்பாக்கம் தாலுகா குடியமல்லூர் ஊரை குறும்பருக்குப்பின் குலோத்துங்கன் ஆட்சி செய்தான். 1. திருவிடைச்சுரத்தில் ஆட்சி செய்த குறும்பர்களைத் தஞ்சை நகரிலிருந்து வந்த ஆதொண்டைச் சோழன் வெற்றி கொண்டான். குறும்பர்களுக்குப் பதிலாகக் கொண்டை கட்டி வேளாளர்கள் அழைத்து வரப்பட்டார்கள். அதன்பிறகு வன்னியர்கள் மன்னரின் கட்டளைப்படி ஆட்சி செய்தார்கள். இதே செய்தி நெறும்பூர் குறும்பர் கோட்டை வரலாறு (டி. எண் 3297) சுவடியிலும் காணப்படுகிறது.

2. தொண்டைமான் விசுவாசு மன்னனிடம் தோல்வியடைந்தான். பின்பு காட்டில் சுற்றி வருகையில் வேதபுர ஈஸ்வரன் இளமுலை அம்மன் உள்ள பொன்மயமான கோபுரம் தென்பட வேதத்தை ஓதினான். அதன்பிறகு விசுவாசு மீது போர் தொடுத்து அழித்தான்.

இவற்றால் குலோத்துங்க சோழனாலும் ஆதொண்டைச் சோழனாலும் ஒடுக்கப்பட்டார்கள் என்பதை அறிய முடிகிறது. ஆதொண்டைச் சோழன் விசுவாசு மன்னனிடம் தோல்வியடைந்து பின்னர் வெற்றி பெற்றான் என்பதால் விசுவாசு என்பவன் குறும்படிச் சிற்றரசனாக இருக்கக்கூடும் என்று கருதலாம்.

3. இராயர்கள் காலத்தில் பல இடங்களிலும் ஆட்சி செய்த குறும்பர்கள். முதலியார்களையும் வேளாளர்களையும் தங்களை வணங்கும்படி வற்புறுத்தினார்கள். ஆனால் முதலியார்களும் வேளாளர்களும் இதற்குச் சம்மதிக்கவில்லை. குறும்பர்கள் பல தொல்லைகளைக் கொடுத்த போதிலும் இவர்கள் உடன்படாததால், குறும்பர்கள் தெருக்களிலும் முச்சந்திகளிலும் வெற்றிலைத் தோட்டங்களிலும் இன்னும் பல இடங்களிலும் திட்டி வாசல்களைக் கட்டி. அதற்கெதிராகத் தாங்கள் அமர்ந்து கொண்டு மற்றவர்கள் தலை குனிந்து செல்ல ஏற்பாடு செய்தார்கள். முதலியார்களும். வேளாளர்களும் தலை குனிந்து நுழைவதற்குப் பதிலாக. முதலில் காலைவிட்டு நுழைந்து குறும்பர்களை அவமானப்படுத்தினார்கள்.

காகிதச்சுவடி ஆய்வுகள்

33