உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆகையால் குறும்பர்கள் வேளாளரையும், முதலியார்களையும் வெட்டிக்

கொன்றார்கள். மேலும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளின் தலைகளையும் வெட்டிக் கொன்றார்கள். இதனால் கோபமுற்ற அவர்கள் தக்க சமயம் பார்த்துச் சவரம் செய்வோர் தலைவனை உதவி செய்யும்படியாகக் கேட்டுக் கொண்டார்கள்.

குறும்ப இனத்தவரில் ஒருவர் இறந்து போனால் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளும் அனைவரும் ஏக சவரம் செய்து கொள்ளுதல் வழக்கம். அவ்வாறு ஒருவன் இறந்து போனபோது நடந்த இறுதிச் சடங்கின்போது. சவரம் செய்வோர் அனைவரும் ஒற்றுமையாக இருந்து சவரம் செய்வது போலக் குறும்ப பிரபுக்கள் எழுவரோடு இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர் அனைவரையும் கொன்றார்கள். எஞ்சியிருந்த குறும்பரில் ஒருபகுதியினர் ஓடிப்போனார்கள். மேலும் ஒருபகுதியினர் அக்கினி வளர்த்து அதில் குதித்தார்கள். மற்றும் ஒரு பகுதியினர் அந்தக் கோட்டையில் இருக்கும் பெரிய அகழியில் குதித்து இறந்தார்கள். அப்பொழுது பெண்கள் நெறும்பூரில் முப்போகம் விளைந்தாலும் உப்புக்கு நெல் கிடைக்காமல் போக வேண்டுமென்று சாபமிட்டார்களாம். இச்செய்தி 'குறும்பர் கைபீது' (டி எண். 2867) என்ற சுவடியிலும் காணப்படுகிறது.

இதனால் நெறும்பூரில் அதிக எண்ணிக்கையில் குறும்பர்கள் அழிந்துபோனார்கள் என்பதை அறிய முடிகிறது.

ஆய்வு முடிவுகள்

34

1. 'குறும்பர்கள்' இந்தியாவில் தென் மாநிலங்களில் வாழும் இனத்தவர். 2. முன்னாளில் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து குடியேறியவர்கள். இவர்கள் கன்னடம் பேசுவர் என்ற தர்ஸ்டன் என்பாரின் கருத்தும். இவர்கள் கன்னடம், மலையாளம் போன்றவற்றின் கிளை மொழியையே பேசுகின்றனர் என்ற வாழ்வியல் களஞ்சியம் கூறும் கருத்தும் இதனை உறுதிப் படுத்துகின்றன.

3. சங்ககாலம் முதற்கொண்டு சிற்றரசர்களாக விளங்கி, தமிழகத்தின் வட மாவட்டங்கள் பலவற்றிலும் கோட்டைகள் கட்டி ஆட்சி செய்துள்ளனர் பேரரசர்களோடு போர் செய்யும் வலிமை வாய்ந்தவர்களாக விளங்கினர். 4. இக்குறும்ப இனத்தவர் காடுகளில் வேட்டுவத் தொழிலை மேற்கொண்டு வாழ்ந்துள்ளனர். குறும்பர்கள் வலிமை இழந்த காலத்தில் சிற்றரசர்களாக விளங்கியவர்கள் காடுகளுக்குத் துரத்தியடிக்கப்பட்டார்கள். அவர்களே இன்று பழங்குடிகளாக வாழும் குறும்பர் இனத்தவர் என்று அறிந்து கொள்ள முடிகிறது.

5. குறும்பர்கள் 8ஆம் நூற்றாண்டு வரையில் சிற்றரசர்களாக இருந்துள்ளனர் என்பதைச் சான்றுகள் மூலமாக உணர முடிகிறது.

6. சிற்றரசர்களாக விளங்கி. நாகரிக வளர்ச்சியடைந்திருந்த குறும்பர்களின் சந்ததியினர் பலர் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவி இன்றும் வாழ்ந்து

காகிதச்சுவடி ஆய்வுகள்