உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1786 துளஜா றாஜா சாயேப் வேளாங்குல மகாணம் ஆவுடையார் கோயில் அம்மனுக்கு வெள்ளிக் கிழமை கட்டளைக்கு 58'/2 குழி இனாம் கொடுத்தார்

என்ற மோடி ஆவணத்தினின்று திருவாரூர்த் தியாகராசர் கோயிலுக்கும். ஆவுடையார் கோயில் அம்மனுக்கும் பூசைக்கு மராத்திய மன்னர் இரண்டாம் துளஜா கொடை அளித்ததை அறிய முடிகிறது.

மன்னர் இரண்டாம் சரபோசி பெரிய கோயிலுக்குப் பல பகுதிகளிலிருந்து சுரோத்திரியம். சர்வமானியம், நிலங்களைக் கொடையாக அளித்துள்ளார் என்பதை.

"தஞ்சைப் பெரிய கோயிலுக்கு சுரோத்திரியம் நஞ்சை நிலம் மாயூரம் தாலுகா சோளம்பேட்டை மாகாணம். விளியநல்லூர் கிராமத்தில் சோலி 6க்கு பூண்டி பாகம் 1/3 வேலி, 2 ஆவங்குடியில் 1/3 பாகம் ஆக 2 கிராமங்கள் 3 வருஷத்துக்கு குத்தகை ஸ்ரீ 468

"சூரக்கோட்டையில் 31/4 வேலி நன்செய், புன்செய் விலைக்கு வாங்கி மானியமாகக் கொடுக்கப்பட்டது"?

44

"முத்தம்மாள்புரம் படுகை. நெய்வாசல், தென்பாதி ஸ்ரீ பிரகதீஸ்வர ஸ்வாமி கோயிலுடைய தேவஸ்தான மொயின்'

என வருகின்ற மோடி ஆவணச் செய்திகளின் வாயிலாக வில்லியநல்லூர், ஆலங்குடி. சூரக்கோட்டை, முத்தம்மாள்புரம், நெய்வாசல் போன்ற ஊர்களிலிருந்து நிலங்கள் கொடையாக அளிக்கப்பட்டன என்பதை அறியமுடிகிறது.

தஞ்சை மராத்திய மன்னர்கள் புதியதாகக் கோயில்களைச் செப்பனிட்டு. குடமுழுக்கு செய்வித்து. நிலக்கொடைகள் அளித்ததோடு பல அணிகலன்களையும் கொடையாக வழங்கியுள்ளனர் இரண்டாம் சரபோசி மன்னர் கி. பி. 1804இல் திருவையாறு பஞ்சநதீகவர சுவாமி சோமாஸ்கந்த மூர்த்தி அம்மனுக்குக் கல்லிழைத்த கிரீடம் மற்றும் காதணிகள் கொடுத்துள்ளார்.

கி. பி. 1807ஆம் ஆண்டு இம்மன்னர் தலப்பயணம் சென்றபொழுது மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குச் சென்று சிவபெருமானை வழிபட்டு அவருக்கு 'நாகாபரணம்' ஒன்றைத் தம் பெயரில் கொடையாக அளித்துள்ளார். இவ்வாபரணம் செய்ய 1352 சக்கரம் செலவிடப்பட்டது என்பதை மோடி ஆவணம் சுட்டுகிறது. இரண்டாம் சரபோசி மன்னர் கி. பி. 1821ஆம் ஆண்டு திருப்பதி வெங்கடாசலப் பெருமாளுக்கு 149 வைரக்கற்களும் 50 மாணிக்கமும் வைத்துக் கல்லிழைத்த நாமம் செய்து கொடையாக அளித்தார் என்ற செய்தியை,

"1821 ராஜமகால் சாஹேபிடமிருந்து வந்த கல்விழைத்த நாமம் திருப்பதிக்கு அனுப்புவதற்கு மராமத்து மகால் ஹவால்தார் நரஸோஜி சிந்தே இடம் கொடுத்தது. அதற்கு 149 வைரம் 50 மாணிக்கம் "

காகிதச்சுவடி ஆய்வுகள்

403