உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




என்ற மோடி ஆவணம் உறுதிப்படுத்துகிறது.

தஞ்சை மராத்திய மன்னர்களால் எடுப்பிக்கப்பெற்ற எல்லாச் சமயக் கோயில்களுக்கும் ஆதரவு அளித்ததோடு திருவிழாக் காலங்களிலும் சமய வேறுபாடின்றிக் கொடைகளை அளித்துள்ளனர். இக்காலங்களில் எல்லாச் சமயத்தினரும் ஒன்றாக இணைந்து திருவிழாக்களைச் சிறப்பாக நடத்தி, சமயப் பொறையுடன் நடந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

"1811இல் மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலசுவாமி தேர்த் திருநாளுக்கு 15 சக்கரம்"

"பட்டுக்கோட்டை நாடியம்மன் தேர்த் திருநாளுக்கு 150 சக்கரம்’16

"திருச்சேறை கஸ்பா ஸ்ரீ சாரநாத ஸ்வாமி தேர்த் திருநாளுக்கு 5 மாதத்திற்கு 75 சக்கரம் 13/6 பணம்

· 117

"கி பி 1779 பிரகதீசுவரசுவாமி திருநாளுக்காக மொயின் 1700 சக்கரம், " *

"பிரசன்ன வெங்கடேசுவர சுவாமிக்கு ...

சக்கரம் 801*

திருநாள் மான்யம்

“பிரதாப வீரஹனுமாருக்கு மாசி மாதம் தேர்த் திருவிழா வழக்கப்படி சக்கரம் 280*320

"கொங்கணேசுவரர் தேர்த் திருவிழா, திருநாள் மொயின் வருஷ வழக்கப்படி 280 சக்கரம் ’’21

போன்ற மோடி ஆவணக் குறிப்புகள மன்னர்கள் காலத்தில் தேர்த் திருவிழா நடைபெற்றதையும். அதற்குக் கொடைகள் அளித்ததையும்

உறுதிப்படுத்துகின்றன.

மராத்திய மன்னர்கள் கிறித்தவ சமயத்திற்குப் பேராதரவு அளித்ததோடு அவர்களுக்குத் தேவாலயம், கல்லறை கட்டுவதற்கு நிலங்களைக் கொடையாக நல்கியுள்ளனர் இந்தியாவில் முதல் ஆங்கிலப் பள்ளி மன்னர்கள் ஆதரவுடன் கிறித்தவப் பாதிரிமார்களால் தஞ்சையில் நிறுவப்பட்டது. மேலும் கிறித்தவர்களின் பண்டிகைகளான கிறித்துமஸ், புத்தாண்டு போன்றவை சிறப்பாக மக்களால் கொண்டாடப்பட்டன. பண்டிகையின்போது மன்னர் கொடை அளித்துள்ளார் என்பதை.

"ஜனவரிப் பண்டிகைக்காக மிஸ்தர் பிளாக்பர்ன் சாயேபுக்கு இனாம் 500 சக்கரம்'

என்ற மோடி ஆவணக் குறிப்பின் வாயிலாக அறியப்படுகிறது

404

காகிதச்சுவடி ஆய்வுகள்