உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அல்லாப் பண்டிகை

இந்து சமயத்தினராகிய தஞ்சை மராத்திய மன்னர்கள் இசுலாமிய சமயத்தவர்க்கு வேண்டிய ஆதரவுகளை அளித்து. அவர்களது கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களிலும் கலந்து கொண்டு கொடை அளித்து வ்விழாக்கள் சிறப்பாக நடந்திட உதவி செய்துளளனர். அல்லாப் பண்டிகைக்காக மராத்திய மன்னர்கள் தர்க்காக்களுக்கும் சென்றுள்ளனர். அப்பொழுது பணக்கொடை அளித்துள்ளனர். இதனை.

"1811 ஸர்வர்ஹூஸேனி அல்லாவுக்கு அல்லாப் பண்டிகைக்காக 10 சக்கரம் * * 23

"1829 திவான் சாஹேப் நாலு வீதிகளிலும் சுற்றிவரப் போன பொழுது அந்தந்த இடத்திலுள்ள அல்லாக்களுக்கு அல்லாப் பண்டிகைக்காக இனாம் ரூ 33524

"1841 படே ஹூஸேனி சாயேப் தர்காவுக்கு ரூ 23 ஸர்வர் ஹூஸேனி சாயேப் தர்காவுக்கு ரூ 17

இராஜ்யத்தின் அல்லாவிற்கு ரூ 11

கமான் ஹூஸனி அல்லாவுக்கு ரூ 11

பர்சிஹூஸேனி அல்லாவுக்கு ரூ 7

7

டால்ஸஹேப் வகையறா அல்லாக்களுக்கு ரூ 64

1125

அல்லாப் பண்டிகைக்காக இனாம்"

என்ற ஆவணங்களின் மூலம் அறியமுடிகிறது.

மராத்திய மன்னர்கள் மட்டுமல்லாமல் அரசமாதேவியரும் சமயப் பொறையுடையவர்களாய் அல்லாப் பண்டிகைக்கு நன்கொடை அளித்தனர்.

"அல்லாப் பண்டிகைக்குப் பக்கீர்களுக்குக் கொடுப்பதற்கு மாது

ஸ்ரீ அவு சாயேப் ரூ 30 : ரூ

சௌ. மாது ஸ்ரீ சைதம்பாபாயி சாகேப் ரூ 30:

காமாட்சியம்பாபாயி சாகேப்

ரூ 25:

சுலக்ஷணபாயி அமணி ராஜே சாயேப் ரூ 10. சக்வாரம்பாபாயி சாகேப் ரூ 20 ஆக 10526

என்று மோடி ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் அல்லாப்

பண்டிகையின்போது நடைபெறும் பானக பூசைக்குக் கொடை கொடுத்ததை.

"1827 அல்லாப் பண்டிகைக்காக பானக பூஜைக்கு சக்கரம் 1”

என்ற மோடி ஆவணம் தெரிவிக்கிறது. மொஹரம் பண்டிகையின்போது தர்க்காவில் நடைபெறும் கொடியேற்றம். விளக்குக்கு எண்ணை. சர்பத், கிசடி போன்ற செலவிற்கும் கடைசி சிவாஜி மன்னர் கொடை அளித்துள்ளார். இதை.

காகிதச்சுவடி ஆய்வுகள்

405