உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1841 பெரிய ஹூஸேநீ அல்லாவுக்கு மோஹரம் பண்டிகைக்கும் கொடியேற்றம் விளக்குக்கு. எண்ணை, சர்பத், கிசடி இவைகளுக்காக 10 தினங்களுக்கு 11 சக்கரம்

என்ற மோடி ஆவணத்தின் வாயிலாக அறியமுடிகிறது.

"1827 நாகூர் காதிர்சாயபு தர்காவுக்கு

உற்சவத்துக்காகச்

சர்க்காரிலிருந்து மூடுகிற வஸ்திரத்தை வழக்கப்படி அனுப்புவதற்கு சக்கரம் 202

என்ற மோடி ஆவணக் குறிப்பால் நாகூர் தர்க்காவுக்குத் திருவிழாக் காலத்தில் ஆண்டுதோறும் ஆடை அனுப்பி வந்தனர் என்பது தெரிகிறது. இவ்வழககம் இன்றும் நடைபெற்று வருகிறது. அல்லாப் பண்டிகையின்போது இத்தர்க்காவிற்கு நகரா வாத்தியம் என்ற இசைக்கருவி செய்தளிக்கப் பெற்றது "

அல்லாத் திருவிழாவில் 9ஆம் நாள் ஊர்வலம் செல்வதற்கு கி. பி. 1834இல் தங்கத் தேர், வெள்ளித் தேர். யானை தந்தத் தேர். பெரியது. சிறியது. சங்கிதத் தேர் ஆக ஐந்து தேர்கள் கடைசி சிவாஜி மன்னரால் வழங்கப் பெற்றன. இதை.

"1834. அல்லா வைக்குமிடத்திலிருக்கிற அல்லா வகையறாக்கள் 9ம் நாள் ஊர்வலத்திற்கும் கோட்டையின் வெளியேயும் போவதற்கு தேர் தயார் செய்வதைப் பற்றி தங்கத்தேர் - 1. வெள்ளித்தேர் - 1. யானைத் தந்தத்தின் தேர் - 2 - பெரியது - 1. சின்னது - 1. ஸங்கிதத் தேர்

-

மஹாலோபியிலிருந்து கொடுக்கிறது"

என்று மோடி ஆவணம் கூறுகிறது.

-

1. ஆக 5 இவைகளுக்கு

வேண்டிய

சாமான்களைக்

இங்ஙனம் தஞ்சை மராத்திய மன்னர்கள் அல்லாப் பண்டிகைக் காலத்தில் நன்கொடைகளும், தேர் முதலியனவும் அளித்து இசுலாமிய சமயத்தினரின் நன்மதிப்பையும், ஆதரவையும் பெற்றுச் சமயப் பொறையுடன் நடந்து கொண்டனர் என்பதை வரலாற்றுச் சான்றுகள் புலப்படுத்துகின்றன.

தஞ்சை மராத்திய மன்னர்களால் நடத்தப்பெற்ற கோயில் திருவிழாக்கள் மக்களிடையே மகிழ்ச்சியை அளித்ததோடு அவர்களின் பக்தி உணர்வைத் தூண்டின. கோயில்களிலும் அரண்மனையிலும் திருவிழாக்கள். பண்டிகைகள் கொண்டாடச் செய்தமை வாயிலாக மன்னர்களின் சமயப் பணிச் சிறப்பை அறியமுடிகிறது. தேர்த் திருவிழாவின்போது தேர்களை இழுக்கப் பல்வேறு ஊர்களிலிருந்தும் ஆட்கள் வரவழைக்கப்பட்டனர். அனைத்து இனமக்களும் ஒன்று சேர்ந்து தேரிழுக்கும் பொழுது ஏழை, பணக்காரன். உயர்ந்தோர். தாழ்ந்தோர் என்ற பாகுபாடின்றிச் சமய ஒற்றுமையுடன், றை ஓங்க அனைத்து மக்களும் ஒற்றுமையோடு இறைப்பணி புரிந்தனர் திருவிழாக்களின்போது நாடகங்கள். நாட்டியங்கள். கூத்துக்கள், காகிதச்சுவடி ஆய்வுகள்

406