பக்கம்:காகித உறவு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

குடிக்காத போதை


காதலியை கடைசி முறையாகப் பார்ப்பவன் போல், காளிமுத்து சாராயப் பானையைப் பார்த்துக் கொண்டிருந்த போது, கையாட்கள் கிளாஸ்களை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். காளிமுத்துவின் பகுதிக்குள் தைரியமாக வரும் அந்த வாடிக்கைக்காரர்கள் இப்போது போலீஸ் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிற பயத்தால் அவசர அவசரமாக குடித்துக் கொண்டிருந்தார்கள். நாளையிலிருந்து தொழிலை நிறுத்தப்போகும் வேதனைச் செயலை நினைத்து, வெம்பிக் கொண்டே காளிமுத்து இருந்தபோது ஒருவர் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு உள்ளே வந்தார். காளிமுத்து அவரைக் கோபமாகப் பார்த்தான். அது, வெட்டிக் கோபமல்ல. வெற்றிக் கோபம்.

"என்ன ராமு மச்சான்! ஏது இந்தப் பக்கம்"

'அத ஏண்டா கேக்குற... சட்டாம் பட்டிக்காரன். கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டான். கேட்டால் காரணமும் சொல்ல மாட்டாக்கான். சரி. ஒன்கிட்டேயே இனிமேல். பத்து வச்சுக்கதா. தீர்மானம் பண்ணிட்டேன். நாலு கிளாஸ் கொடு. சரக்கு நல்லா இருக்கணும்."

காளிமுத்து கோபமாகப் பேசினான்.

"தொட்டிலையும் ஆட்டி. குழந்தையையும். கிள்ளி விட்டால் என்ன மச்சான் அர்த்தம்?"

"என்னடா சொல்றே?"

"பின்ன என்ன மச்சான்? முளைச்சி. மூணு இலை விடல. இந்த மூர்த்திப் பயலோட அட்டகாசம் தாங்க முடியல... அவனை... கண்டிச்சுப்பேச. முடியாத ஒங்க... வாய்க்கு... சாராயம் எதுக்கு. எதுக்குன்னேன்?..."

"அந்தக் கதையை. அப்புறமா பேசலாம். இப்போ. கிளாஸ் எடு:

'முடியாது. முடியவே முடியாது. மூர்த்திய. அடக்க முடியாத ஒங்க கையால கிளாஸை. பிடிக்க முடியாது."

"அவனை... அடக்குறதுக்கு நானாச்சு... கிளாஸ்ல... ஊத்துடா..."

'முடியாது அடக்கிட்டு வாரும்... அப்புறமா... இந்தப் பானையை ஒங்கிட்டத் தந்துடுறேன்..."

"ஒரே ஒரு கிளாஸாவது ஊத்துடா..."

'முடியாது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/18&oldid=1383434" இலிருந்து மீள்விக்கப்பட்டது