பக்கம்:காகித உறவு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

51


"மன்னிப்புக் கேள். மன்னிப்புக் கேள்...

முதல்வர் நிலைமையைப் புரிந்து கொண்டார். 'ஐ.ஆம்...ஸாரி. அவர் சார்பில் நான் மன்னிப்புக் கேட்கிறேன். ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மி. எக்ஸ்க்யூஸ் ஹிம்.'

மாணவர்கள் திருப்பிக் கத்தினார்கள் 'வைஸ்' என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்துக் கத்தினார்கள், விட்டுடுங்கடா என்று சொல்லப் போன கோபாலால் அப்படி ஒரு வார்த்தையை வாய் வழியாக விட முடியவில்லை.

முடியாது, வைஸ்-பிரின்ஸிபால் மன்னிப்புக் கேட்கணும் சம்பந்தப்படாத வைஸ் பிரின்ஸிபால் சம்பந்தமில்லாமல் ஏசினதுக்கு, பகிரங்கமாய் மன்னிப்புக் கேட்கணும். இப்பவே கேட்கணும். இல்லைன்னா...'

கல்லூரி முதல்வர் நிலைமையைப் புரிந்து கொண்டார். தலைக்குமேல் வெள்ளத்தை விடக்கூடாது, விட்டால் சேதம் வெள்ளத்துக்கு அல்ல.

"மிஸ்டர் வைஸ்-பிரின்ஸிபால், ஒங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயத்துல, நீங் தலையிட்டது தப்பு. நீங்க வருத்தம் தெரிவிக்கணும். பொறுங்கப்பா. அவரு மன்னிப்புக் கேட்பாரு...'

வைஸ்-பிரின் ஸிப்பால் முதல்வரைப் பார்த்தார். சக ஆசிரியர்களைப் பார்த்தார். ஒருவராவது ஏன் கேட்கணும் என்று கேட்கவில்லை. மாணவர்களோ, பல்லைக் கடித்துக் கொண்டு நின்றார்கள். ஐ. ஆம். ஸாரி. மன்னிச்சிடுங்க. என்று சொல்லி விட்டு தன்னையே தான் மன்னிக்க முடியாதவர் போல் கைகளை நெறித்தார். பின்னர் கண்களைத் துடைத்துக் கொண்டார். கூனிக் குறுகி உட்கார்ந்தார். மாணவர்கள் 'ஒன்ஸ் மோர்' என்றார்கள்.

சில நிமிடம் மெளனம். கோபால் வெற்றி விழாக் கூட்டத்தில் பேசுபவன் போல் கேட்டான் :

"அப்புறம் இந்த சனிக்கிழமை விவகாரம்...'

முதல்வர் பரிதாபமாகப் பதிலளித்தார்.

'எனக்கு 'பவர்' இல்லேப்பா. இருந்தால் விட மாட்டனா?”

ராமு ஒரு யோசனை சொன்னான் :

'ஆல்ரைட், நாளைக்குப் புரட்டாசி சனிக்கிழமை அதனால நீங்க லீவ் விடலாம். அடுத்த திங்கட் கிழமை பேசலாம்...'.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/53&oldid=1383577" இலிருந்து மீள்விக்கப்பட்டது