பக்கம்:காகித உறவு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

65



"ஆமாம் நீங்கள்லாம் சோறுதான் திங்கிறீங்களா?" என்றார், அவர். அந்தக் குடிசை மாதிரி பல குடிசைகளை வாங்கிப் போட்டிருப்பவர். காத்தாயியின் வாடகைப் பணத்தை வசூலிக்க வந்து அலுத்துப் போனவர். கண்ணடிக்குள் விழாத அவளை வெளியேற்றிவிட்டு இன்னொரு குடித்தனத்தை கொண்டு வருவதில் குறியாக இருக்கும் அவர், காத்தாயி வாடகை தரக்கூடாதென விரும்பினார். அப்பதானே. விரட்டலாம்.

உள்ளே இருந்து வெளியே வந்த முனுசாமி பொறந்த நாள் கேக் வாங்க மறந்துடாதே. குமார்பய வெட்டுனதை விட பெர்சா இருக்கணும் என்று சொன்னபோது, மோட்டார் பைக்கர் இடியெனச் சிரித்துவிட்டு, அடடே... நீங்க கூட பொறந்தநாள். வச்சிட்டிங்களா? நாடு உருப்பட்டாப்லத்தான். கேக் வாங்க காசு இருக்கு. வாடகபாக்கியக் கொடுக்க வக்கு இல்லியா... காத்தாயி... ஒன்னத்தான். வாடகப் பணத்தை தரப்போறியா. இல்லை. காலி பண்றியா?. இப்பவே ரெண்டுல ஒன்னு தெரியணும்'. என்றார்.

காத்தாயி அந்த மனிதனை நிமிர்ந்து பார்த்தாள். எட்டுத் தெருவுக்கு கேட்கும்படியா கத்துற பயல், ... இவங்கிட்ட... எந்த வில்லங்கமும். வேண்டாம்.

"இந்தாங்க ஒங்க வாடகை'

'நான் வந்துதான் வாங்கணும். நீ வந்து கொடுக்கப்படாதோ?...

'யோவ், இத்தோட, நிறுத்திக்கோ இதான் லிமிட்.'

மோட்டார் சைக்கிளின் முரட்டுத்தனத்திற்கு ஏற்றாற் போல் இருந்த அந்த ஆசாமி, அவளை ஒரு பொருட்டாக நினைக்காதவன் போல் சிரித்துக் கொண்டே போய்விட்டார். காத்தாயி உள்ளே வந்து முட்டிக் கால்களில் தலையைத் தோய்த்தபோது, முனுசாமி கேக் வெட்டணும் வெட்டணும் என்று அடம் பிடித்தான்.

அவ்வளவுதான், காத்தாயிக்குக் கண்மண் தெரியாத கோபம். முனுசாமியின் முடியைப் பிடித்துக் கொண்டு, 'நீ' கெட்ட கேட்டுக்கு. பொறந்த நாளா. பொறந்த நாள்...' என்று சொல்லிக் கொண்டே முதுகிலும் தலையிலும் விளாசிய போது, அம்மாவின் கவனம் தன் பக்கம் விழாமல் இருக்க, எனக்கு பொறந்தநாள். வாண்டாம்மா... என்று காந்திமதி புலம்பினாள்.

கா.5.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/67&oldid=1383314" இலிருந்து மீள்விக்கப்பட்டது